நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Saturday, June 14, 2014

என்னண்டு சொல்வேன் எப்படிச்சொல்வேன்!




என்னண்டு சொல்வேன்
எப்படிச்சொல்வேன்!

மதில்மேல் மறிப்பூனை மருள்பிடித்து
மாறிமாறிக் கத்துதென்டால்
கெதியிலே சாவு விழுமாம்
குடும்பத்தில் என்கிறாங்க !

பசிதாங்கா 'பக்கிள்' பறந்து பறந்து
அலறினா பக்கத்து வீட்டிலோ
அன்றி உறவினர் வழியிலோ
மையித்து விழுமாம்!!

பகலில் கோழி இட்ட முட்டை
ராவிலே வீட்டுக்கு வெளியிலே
கைமாறுவது கஷ்டம்
இஸ்டம் இருந்தாலும் கொடுத்தா
நஷ்டம் வந்திடுமாம்
அது பொல்லாத "முசிபத்தாம்"
ஆபத்தில் உதவுவது
அப்படிஎன்ன பாவம் ?"

வலது கண் துடிச்சா நலவு
நடக்காதாம்
இடது கண்துடிச்சி நித்திரையும்
இழுத்ததென்றால் காசி வருவாம்
அது நல்ல ராசியுமாம்!

உச்சிக்கு மேல சுவரிலே அப்பியிருக்கும்
ஒத்தப்ப்பல்லி சொல்லுதாம்
நீ சொல்லுவது சரியென்று
நல்ல பகடி இது இதநினைச்சி
நாள்முழுக்க சிரிக்கணும்பா!

கறுத்தப்பூனையோன்று
இரை பிடிக்க வீதியைக் குறுக்கறுத்தா
எடுத்த காரியம் இடறிடுமாம்
அது குறையிலதான் நின்றிடுமாம்
சகுனம் சரியில்லை நிறுத்தடா வண்டியை
திருப்படா வீட்டுக்கு
நேரத்தின் விலைதெரியா
விட்டேத்தி கூறுகிறான்!

கொல்லையிலே நின்று
நல்லாப் பூத்தமரம்
காய்த்து கலகலன்னு நின்றமரம்

பால்மரமாம்
பிள்ளையும் பிறக்காதாம்
சாமூலையாம் சரியில்லையாம்
என்று சொல்ல
அப்பாவி பச்சை மரம்
அடுத்தநாளேஅ டியோடு சரிகிறது
அட மடையா
விந்தும் முட்டையும்
சந்திக்க வேண்டுமடா
பிள்ளை பிறப்பதற்கு
இத நீ அறியா
முட்டாள்டா அதனால்தான்
பிள்ளையில்லா
தரித்திரியம் இன்னும் தொடர்கிறது!

காணமல் போனதொரு
அண்டங்ககாக்கையின் சோடி
ஒற்றை கத்துது விடாமல்
மற்றதைத்தேடி
விருந்தினர் வருவாராம்
வீட்டுக்கு
காக்கையின் சாத்திரமாம்
மனிசனுக்கு!

உள்ளங்கை சொறியுதாம்
உதட்டிலே மச்சமாம்
கன்னத்தில் குளியுண்டாம்
கதையெல்லாம் சொல்லுறாங்க
கண்கட்டி வித்தைபோல
ஏமாந்து அதை
ஆட்களெல்லாம் நம்புறாங்க

அழுக்கை கங்கையிலே
அடிக்கடி அமிழ்த்திறாங்க
அறிவைக் கண்கட்டி
மடமையில் வீழ்த்துறாங்க

ஏதேதோ சொல்லுறாங்க
இடக்குமுடக்கா பேசுறாங்க
கதைகதையா அளக்கிறாங்க
காரணமும் காட்டுறாங்க!

மு.இ.உமர் அலி
13 June 2014

குறிப்பு"பக்கிள்-ஆந்தை
மையித்து-சவம்
முசிபத்து-தோஷம்
 — with Mm.mohamed Kamil,Memon KaviKrish Mani and 43 others.
LikeLike ·  · Stop Notifications · Share

0 கருத்துக்கள்:

Post a Comment