நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Thursday, June 26, 2014

விழி!

விழி !

நான் அதை மான் ஓடும்
காடென்பேன்
மீன்வாளும் தெளிந்த
குளமென்பேன்
போராடும் கூர் வாளென்பேன்
பார்வையை எறிகின்ற
வேலென்பேன்

மருண்டோடும்
மான் என்பேன்
உருண்டோடும்
தேர் என்பேன்

மழை பொழியும்
வான் என்பேன்
வழிந்தோடும்
ஆறும் என்பேன்

தவித்துத்
துடிக்கின்ற மீன் என்பேன்
விரிந்து மீன் பிடிக்கும்
வலை என்பேன்
சுட்டெரிக்கும்
கனல் என்பேன்
அறியாமை இருளகற்றும்
ஒளியின் கண் என்பேன்!

உள்ளங்கள் இணைக்கின்ற
நூலென்பேன்
நெஞ்சம் கவர்ந்திழுக்கும்
கள்ளக் காந்தமென்பேன்
அன்பாய் அணைக்கின்ற
கரம் என்பேன்
சதிசெய்து வீழ்த்துகின்ற
பொறி என்பேன்

உள்ளப்பூங்காவின்
வண்ண வண்ண புஷ்பங்களை
அள்ளிச்சொரிகின்ற
பொய்கை என்பேன்!

தண்ணீரில் மிதக்கின்ற
வெண்தாமரை மலரென்பேன்
விண்ணிலே நீந்துகின்ற
தண்மதிஎன்பேன்!

மண்ணிலே உயிர்வாழும்
தாரகை
கண்ணிலே உள்ளது
மதுபோதை

கல்லெறிந்து அது கொடுக்கும்
தண்டனை
சொல்லாமல் அது சொல்லும்
பசி செய்யும் நிந்தனை

பயிர்ப்பை பயிரிட்டு
பயத்தையும் படம் காட்டும்
உயிர்ப்பு உள்ள விழி
உயிர்போயின் உண்மையை
நிலை நாட்டும் !

கோட்டைகள் பிடித்திடும்
சிலவேளை
சாட்டையடியும் கொடுத்திடும்
அதேவேளை
களவினை காட்டிக் கொடுப்பதும்
அதன் வேலை !

காறாமல் உமிழ்வது
கண்தானே நிறம்
மாறாமல் அது வாழ்வதும்
நிஜம்தானே

புன்னகை செய்யும்
பளிச்சென்று
தருணத்தில் மன்னரை வீழ்த்திடும்
அது பூச்செண்டு!

எண்ணிலா உவமையுண்டு
ஒரு கண்ணிலே
பல கதையுமுண்டு
வெண்ணிலா மனதில் புதையுண்டு
நெஞ்சிலாடுது நிதம் நிண்டு!


மு.இ.உமர் அலி
2014 june 26
 — with Mansoor A CaderGovind DhandaCamer Rila and 44 others.
LikeLike ·  · Stop Notifications · Share
  • Rathy Srimohan அழகிய விழிகள் அருமை....!
  • Shafath Ahmed நீண்ட நாட்களுக்குப் பிறகு..அதென்ன திடீரென்று கண்களின் வர்ணனை. இந்தக் கவிதைக்கு ஒப்பான அந்த விழியாளைக் கண்டுபிடித்துவிட்டீர்களோ..? உவமை,வர்ணிப்புகள் அருமை. இது
    கற்பனைக்கு வராது. நீண்ட..நெடுநேர அவதானிப்பேதான்..??!!
  • Valarmathy Siva ஆஹா!ஆஹா!கண்களும் கவி பாடுதே......இல்லை இல்லை கண்களைப் பார்த்து இக் கவிஞரும் பாடினாரே,,,கண் அழகா கண்களைப் பாடிய கவிதை அழகா என்று போட்டியா இங்கே?பிரமாதம்
  • யாழ். இலக்கியக் குவியம் அன்பாய் அணைக்கின்ற 
    கரம் என்பேன் 
    சதிசெய்து வீழ்த்துகின்ற 
    பொறி என்பேன்--------பொன்என்பேன் சிறு பூவென்பேன் பாடல் நினைவிற்கு வந்தது நல்ல கவிதை.
  • Sunandha Prabha Excellent lines nanba.. enne oru varnanai.. எண்ணிலா உவமையுண்டு ஒரு கண்ணிலே பல கதையுமுண்டு வெண்ணிலா மனதில் புதையுண்டுநெஞ்சிலாடுது நிதம் நிண்டு!.. wow nu than sollamudiyum.. arumai...!
  • Rameeza Mohideen Yaseen தண்ணீரில் மிதக்கிற
    வெண்தாமரை மலரென்பேன்
    விண்ணிலே நீந்துகின்ற
    தண்மதி என்பேன்!

    அருமையான கவிதை.கிளியோபட்ராவின் விழியில் வீழ்ந்த கீசர்கள் பலருண்டு இன்றும்.கவிஞரே அற்புதம்.
  • Maha Lingam · Friends with Yacoob Ali and 3 others
    Arumai
  • யோ புரட்சி பிடிப்பு
  • Abdul Hamed E Sahurudeen .
    அவள் கண்ணிலே கலந்து கருத்தாய் 
    காதலாய் காவியமாய் வனம்தனின் 
    வீசும் சில்லெனும் தென்றல் காற்றாய் 
    வாளெடுத்து போர்தொடுக்கும் களமாய்
    கவியின் ஆதிதொட்டு அந்தம்வரை 
    அழகான வர்ணனையில் இன்னுமுண்டு 
    என்றே தொடரும் அவள் விழி பார்வை 
    வின்மீனைப்போலே அவள் கண்மீனும் 
    எமக்கு ஆனந்தம் தருகின்றது, வாழ்த்துக்கள்.
  • றாபியின் கிறுக்கல்கள். பெண் விழிகளுக்கு இவ்வளவு உவமைகள் உண்டா?
    வாழ்த்துக்கள் நண்பா
  • Ahamed Jinnah Sherifudeen கண்ணுக்கு இத்தனை கற்பனையா? மொத்தத்தில் கவிதை அழகு வாழ்த்துக்கள்
  • Jaleel Mohd உன் ஓர விழிப்பார்வை எனை ஊமையாக்கி விடுமோயென்ற பயம் எனக்குள்..
  • Mohamed Ismail Umar Ali தாங்களது பின்னூட்டத்துக்கும் ,வாழ்த்துக்களுக்கும் நன்றி காப்பியக்கோ Ahamed Jinnah Sherifudeen அவர்களே
  • Mohamed Ismail Umar Ali அபாடிஎல்லாம் ஒன்றும் இல்லை கொஞ்சம் அகக்கண் திறந்தேன் அத்தனையும் தெரிந்தது....அவ்வளவுதான் .நன்றி உங்கள் கருத்தூட்டத்திற்கு Shafath Ahmed
  • Mohamed Ismail Umar Ali உங்கள் பின்னூட்டங்களிற்கு மனமார்ந்த நன்றிகள்Jaleel Mohd,றாபியின் கிறுக்கல்கள்,AbdulAbdul Hamed E Sahurudeen,யோ புரட்சி,MahaMaha Lingam,Rameeza Rameeza Mohideen Yaseen,Anjuthan Anjuthan Johann Mithiraranjan,Sunandha Sunandha Prabha,Valarmathy Valarmathy Siva,Rathy Rathy Srimohan,,யாழ். இலக்கியக் குவியம்,Murugesu Murugesu Natkunathayalan
    26 June at 10:48 · Edited · Like · 1
  • Ibra Lebbai Karamal umizhvathu kanthane...Niram maramal athu wazhvathum nijamthane! Atputhan nanpare!
  • தேவி பாலா ஆகா..... அண்ணா நானறிந்த வரை விழிகளை இத்தனை அழகாய் ஆழமாய் இத்தனை பொருள் கொண்டு கவிபாடியது யாருமில்லை கண்ணதாசன் முதல் வைரமுத்து வரை கூட இல்லை இது நிஜம்,,,, ஒன்றை பிளந்து அதனுள் ஒன்று அணு கூறு,,,, உங்கள் கவிதையும் அப்படியே சங்கிலித்தொடராய் தொடக்கம் முதல் முடிவு வரை வரிகளை கோர்த்து தரும் விதமும் வியப்பு,,,,,,, தமிழ் சுவை,,, அல்ல,,, உங்களாள் தமிழுக்கே சுவை,,,,, அருமை அண்ணா வாழ்த்துக்கள்
  • Mohamed Ismail Umar Ali நன்றி தேவி பாலா உங்கள் பின்னூட்டம் சிலிர்க்க வைக்கிறது ,ஐயோ ...!மலைகளோடு இந்த சிறு மடுவை ஒப்பிடுவது பொருந்துமா?அந்தச்சிகரங்களின் உயரமென்ன இந்தச்சிறுவனது குள்ளமென்ன?
  • Mohamed Ismail Umar Ali நன்றி நண்பர் Ibra Lebbaiஅவர்களே, கவிஞர் நிந்தமணாளன் அஷ்ரப் அவர்களே
  • Mannar Benil · 8 mutual friends
    கற்பனை ஊற்றும் உவமை சிந்தனயும் கொண்டு நீங்கள் செதுக்கிய கண்கள் கவி சிற்பம் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்
  • Meera Mahroof !!!
    “பொல்லாத கண்களடா
    புன்னகையின் வேஷமடா“
    ...See More
  • Thirugnanasampanthan Lalithakopanகவியும் அழகு கண்களும் அழகு ...மீண்டும் teen age இற்கு பொய் அந்த பழைய விழிகளை பார்க்க வேணும் போல் இருக்கு
    7 hrs · Unlike · 1

0 கருத்துக்கள்:

Post a Comment