நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Tuesday, June 24, 2014

கிளறத்தான் வேண்டுமா?


கிளறத்தான் வேண்டுமா?

மறந்ததை ஏனடா
மீண்டும் கிண்டுறாய்
திறந்ததை பார்க்க ஏன்தான் 
முரண்டு பிடிக்கிறாய்?

இறந்தவர் மீண்டும்
வரவா போகிறார்
உன்னுடன் இருந்து
வாழவா போகிறார் ?

புதை குழி தோண்டும்
கதையை கைவிடு
எதை இனி செய்வது
என்று நன்கே முடிவெடு !

ஆறும் காயத்தை
உரசப்போகிராய்
ஆறாய் குருதியை
வரவைக்க போகிறாய்!

அத்தர் என நினைத்து
கூள்முட்டையை
முகரப்போகிறாய்
குளிர்காய கூட்டம்
காத்துகிடக்குது
கவனம் நீ சகோதரா !

மறக்கத்தான் இறைவன்
மறதியை வைத்தான்
பறக்கத்தாய் நல்ல
வாழ்கையும் தந்தான்

உறக்கத்தில் உளறுதல்
போன்றிது இல்லையா
கிறக்கத்தில் பிளறுதல்
நன்மையோ சொல்லையா?

அப்பாவி கொன்றோர்
எப்போதும் தப்பார்
இப்புவி செய்யும் இறைவன்
காப்பான் அவனைத் தொழுவோர் !

மன்னிப்பான் இறைவன்
மக்களின் தவற்றை
எண்ணித்தான் நீயும்
இனி இக்கதை பேசாய் !

ஏலா மாந்தராய் இனியும் இன்றி
நீயும் வாளாய்!,
வல்லவன் ஏகனைப் போற்றி
இனிதே வாழ்வாய்
நாலா புறமும் நல்லதை ஏற்றி!

குறிப்பு
அத்தர்-வாசனைத்திரவியம்
பறக்கத்- வளமான

மு.இ.உமர் அலி
2014 June 24
 — with Winston Fernando,Mm.mohamed KamilMithaya Kaanavi and 39 others.
LikeLike ·  · Stop Notifications · Share
  • Mohamed Ismail Umar Ali

0 கருத்துக்கள்:

Post a Comment