நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Sunday, June 8, 2014

அநீதியும் அகம்பாவமும்!


அநீதியும் அகம்பாவமும்!

பாதி கடித்த பழங்களெல்லாம்
முழுக்க மூடிய தொட்டிகளில்
கிடந்தது அழுகுகின்றன

அளையாத 
அன்னப்பற்பருக்கைகள்
குலையாமல் ஈக்களுக்காகவும்
ஏறும்புகளுக்காகவும்
இறைந்து கிடக்கின்றன

அத்தனை
சிறிய வயிறுகளுக்கு
எத்தனை பெரிய ஓரு விருந்து

அரைவாசி அருந்திய
பானங்கள்
அவலகாட்சிகளை
பிரசவிக்கின்றன!

இங்குள்ள
பூனைகள் எல்லாம்
நன்றாகக் தின்று
கொழுத்திருக்கின்றன
அவற்றிற்கு கொலஸ்டரோல்
கூட சற்று அதிகமாகவே
இருக்கும் என நினைக்கிறேன்.!

இந்த தேசம்
பசியால் படையடுத்தவர்களின்
ஊழியச்சாலை
இங்குள்ள குடிமக்களுக்கு
பசி என்றால் என்ன என்று படிப்பிப்பது
பிரம்ம பிரயத்தனமாக இருக்கிறது !

இப்போது நாங்களும் தற்காலிகமாக
இவர்களைப்போல
நடந்து கொள்கிறோம்
இல்லை
நடித்துக்கொள்கின்றோம்!

பசிக்க முதலே
புசிக்கிறார்கள்
தகிக்க முன்னரே
குடிக்கிறார்கள்
நமக்கெல்லாம்
தூக்கம் இரவில்
இவர்களுக்கு
இரவோ பகலில்!

பட்டிணிச்சாவால் பல
மானுட சாம்ராஜ்யங்கள்
சரிந்து
சாம்பலாகிக்கொண்டிருக்கும்
வேளையில்
கொட்டிக்குவிக்கிறார்கள்
உணவை கழிவு மலைகளாக
மனித நேயத்தை
குழிவெட்டிப் புதைத்தவர்கள் !

இந்தவூரின்
ஈக்காக்கைகளுக்கு இருக்கும்
பாக்கியம்கூட
அந்த ஆட்களுக்கு இல்லையே

இங்கே அறுசுவை உணவும்
உண்டியும்
அங்கே ஒருசுவையும் இன்றி
கஸ்டப்பட்டே சுரக்கின்ற
உமிழ்நீரை ஒன்றுக்குமேல்பட்ட தடவைகள்
விழுங்கி விழுங்கியே
அழிந்து போகும் ஆன்மாக்கள்!

மு.இ.உமர் அலி
2014 jUNE 8
 — with பிரகாசக்கவி கவிதைகள்,Razana ManafRijan Muhammadh and 42 others.
LikeLike ·  · Stop Notifications · Share
  • Farsan S Muhammad அவர்கள் முசுப்பாத்திக்கி கூடாரம் அடிப்பார்கள் எங்களுக்கு கூடாரம்தான் வாழ்க்கை அவர்கள் தொழிலே இல்லாமல் சம்பளம் எடுப்பார்கள் எங்களுக்கு தொழில் செய்தாலும் அடி சம்பளம்
    8 June at 15:28 · Edited · Unlike · 9
  • Shafath Ahmed அல்லாஹ்வுக்குப் பிடிக்காத வாழ்க்கை அவன் அருள்பெற்ற மண்ணில் அரங்கேறுகிறது.
    பணக்காரக் கூட்டம் பம்மாத்துக் காட்டுகிறது 
    வீணர்களுக்கு இது வெறும் விளையாட்டு 
    விதைபோட்டு வியர்வை சிந்துபவர்களுக்கோ
    வினைகளுடன் விதி விளையாட்டு...
  • Rameeza Mohideen Yaseen நினைக்கவே கவலையாக
    இருக்கு.
    குடிக்க நீரின்றி 
    உண்ண உணவின்றி
    உறங்க இருப்பிடமின்றி
    அலையிது ஒரு கூட்டம்
    இவர்களோ
    ஈகளிற்கு உணவு
    பரிமாறும் அவலம்!

    ஈக்களுக்குள்ள
    பாக்கியம் இவர்களிற்கில்லை!
  • Ashok Ghawdam · Friends with Winston Fernando
    Manusanugalada nenga.....eruma eruma eruma.pannada pannada pannada ..mirugatukku kuda ariu irukkum ungaluku konjam kuda illaye da naykale.ivengalda pesina ennamo vanatila irudu kudicca pola pesuvanga........keduketta nayka tuuuuuuup
  • Mohamed Yaseer · Friends with கந்தளாய் யூசுஃப்
    NIchhayam allahwidam naam anaiwarum ondre awanin sothnayil nichhayam parisu kidaikum
  • Ratha Mariyaratnam இது காலச் சக்கரம் சகோதரா ..இன்றிந்த பாலைவனம் முன்பு சோலையாக இருந்ததாம் ..அந்த இறந்த மரங்கள் இவர்களுக்கு கற்பக தருவாக இருக்கின்றன ...பாலையிலும் இன்று அவர்கள் சொர்க்க புரியை அமைத்திருக்கிறார்கள் ....பாவப்பட்ட எமக்கு அவர்கள் செயல் தவறாக் இருக்கிறது .....ஒரு சோற்றுப் பருக்கைக்கு தவம் இருக்கும் எம் உறவுகள் எங்கே அவர்கள் எங்கே ....அவர்கள் அதை புரியும் காலம் வரும் ....

    தேவையில்லாமல் உணவுகளை உபயோகமற்றதாக்கும் செயல் வருந்தக்கது
    இங்கும் இரவு நேரத்தில் மிஞ்சிய உமாவு வகைகளை , விற்காத உறவுப் பொருட்களை பெருமளவில் கொட்டுகிறார்கள் . இது எம் விதி
  • Fathima Fath அரபிகளிடம் ஒரு பண்பு உள்ளது பெருமை உலகத்தில் நாங்கள்தான் வசதி படைத்தவர்கள் என்ற நினைப்பு இதே பண்பு. நம்வர்களிடம் இல்லையா இதற்கு காரணம் பணம் ஏன் நமது ஊரில் ஹாஜியார்மார் பெரிய பணக்காரர்கள் அடம்பரமா இல்லையா அவர்கள் அவர்களுடைய மக்களுக்கு ஆடம்பரமான வாழ்க்கை அமைத்து கொடுக்கவில்லையா பணம். நம்மிடம் இருக்கும் பொதும் நாம் இப்படிதான் செய்வோம் இதுதான் மனித இயல்பு

    4:36. மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.
    கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் இறைவன் நேசிப்பதில்லை. அல்குர்ஆன்: 4:36, 57:23, 31:18
  • Mohamed Irfankhan · 8 mutual friends
    உன்னுங்கள் பருகுங்கள். ஆனால் வீன் விரயம் செய்யாதீர்கள்.
  • Kalia Nthna · Friends with புலவூரான் ரிஷிand 2 others
    பாசி பாட்டினியை உள்வாங்கிய அழகாக வந்து உங்கள் கவிதை வழ்த்துக்கள்
  • Mohamed Zawahir Worse method.....
  • Zainab Mariyam Rael think there most of the Muslim people around the world have no food.day by day starvation death but these people vasting the food without reason. Look at siriya. Iraq.somaliya. afghan. Ethiopia. Barma...
  • Mohammed Musthafa · 9 mutual friends
    ஏழ்மையின் ஆற்றாமை கவிதையில் எரிமலையாய்!மனம் வெந்து சாம்பலாகிறது,மதிகெட்ட மாந்தரை எண்ணி!
  • Sunandha Prabha Arumayana sinthanai varikalil theriyuthu... enna solli enna payan.. namma athangam than minjum... oruvarum thirunthuvathu illai...
  • மா.சித்ரா தேவி வருத்தமாக இருக்கின்றது
  • Habeeb Rahuman · 3 mutual friends
    Arab..valima.virundu
    Mogul.briyani...
  • Abdul Majeeth .
    Aangal sappitapin
    Athey paathirathil
    Aangal wait'tha
    Michat'thai
    Arab Pengal
    saapiduwargal
    Ariyemo rathy...?

    Athupatri yenna
    Solgrirgal...shri...?
  • Asirwatham Jayaharan · 3 mutual friends
    Good kavithai.what we can do?no job here.
  • Ibra Lebbai Garvam kannay maraikkirathu! Varaddu gowravam unarvay azitthu viddathu, mamathay manitha neyatthay mazaditthu viddathu! Veen virayam vizimpay yeddividdathu. Yiravanukku yenna batìl solvarkal yivarkal? Kavithai mega arumay nanpar ali avarkale!
  • Vanitha Solomon Devasigamony நெஞ்சைச் சுடும் வரிகள் ! ....... ஒருசுவையும் இன்றி ,
    கஸ்டப்பட்டே சுரக்கின்ற உமிழ்நீரை ,
    ஒன்றுக்குமேல்பட்ட தடவைகள் விழுங்கி விழுங்கியே,
    அழிந்து போகும் ஆன்மாக்கள்!
  • Shanker Kula "ARUMAI NANBA"
  • Pesum Kavithaikal கவியும் காட்சியும் மிக அருமை சகோதரன்.இங்கே அறுசுவை உணவும்
    உண்டியும்
    அங்கே ஒருசுவையும் இன்றி
    கஸ்டப்பட்டே சுரக்கின்ற
    உமிழ்நீரை ஒன்றுக்குமேல்பட்ட தடவைகள்
    விழுங்கி விழுங்கியே
    அழிந்து போகும் ஆன்மாக்கள்! இரங்கவைக்கும் வரிகள் மட்டுமல்லாமல் சிந்திக்கவும் செய்கிறது!!!!
  • கவிதைக்காரன் மதுரை அருமையான சொற்களில், கொடுமையான நிகழ்வின் பிரதிபலிப்பு! உலகின் பல நாடுகளில் மனிதம் ஒருவேளை உணவின்றி உருக்குலைந்து கிடக்கிறது. காணச் சகியேன்!
  • Mohamed Ismail Umar Ali இந்தக்கவிதைய படித்து மனங்குமிறிய,பகிர்ந்துகொண்ட, கருத்துத் தெரிவித்து அக்கருத்துக்கள் பலரைச்சென்றடைய காரணமானவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்
  • வளர்மதி சிவா ஒரு புறம் பட்டினி அவலம்,மறுபுறம் உணவு விரயம்.சவுக்கு எடுத்து விளாசியிருக்கிறீர்கள்.அருமை
  • Anvar Rees · Friends with Mafa Palamunai and1 other

0 கருத்துக்கள்:

Post a Comment