நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Sunday, May 11, 2014

தாய் -சருவதேச அன்னையர் தினம் 2014 o5 11





















தாய் !

வா என் குழந்தாய்
என வாஞ்சையோடழைத்தாய்
அரவணைத்தாய்
கொஞ்சி மகிழ்ந்தாய்

பணிவிடை புரிந்தாய்
பணியிடை வந்து பாலும் தந்தாய்
செல்லமாய் முடியளைந்தாய்
கெஞ்சிக் குளைந்தாய்

படிக்க என்னை அடித்தாய்
அடிக்கடி சண்டையும் பிடித்தாய்
செல்லமாய் கடிந்தாய்
பின் உள்மனம் நொந்தாய்

சிலநேரம் கோபித்தாய்
வேளையில் சிலாகித்தாய்
நண்பரைக் கலாய்த்தாய்
நேரம் பிந்தின் கூட்டம் கலைத்தாய்

என்னை உயரிடம் வைத்தாய்
நான் தவறினால் வைதாய்

அன்னம் பிசைந்தாய்
என் எண்ணமும் அறிந்தாய்
கன்னத்தோடிழைந்தாய்
உழைத்து ஓடாய்த் தேய்ந்தாய்

கோரிக்கை இசைந்தாய்
தேவையில் அசைந்தாய்
அன்பைச் சொரிந்தாய்
பண்பை பகிர்ந்தாய்

உன்னையே மறந்தாய்
உறக்கம் தொலைந்தாய்
எனை உறங்கவும் வைத்தாய்
ஆலாய்ப் பறந்தாய்
எனக்காக நாளாய் மடிந்தாய்!

என்றுமே என்தாய்
எல்லாமே என்தாய்
தாய் தாய் தாய் !

உமர் அலி முகம்மதிஸ்மாயில்
2014 may 11

சருவதேச அன்னையர் தினத்தில் என் தாய் ,என் பிள்ளைகளின் தாய் உட்பட அனைத்துத்தாயுள்ளங்களையும் வாழ்த்தியவனாக,அவர்களுக்காகபிரார்த்தித்தவனாக

0 கருத்துக்கள்:

Post a Comment