நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Monday, May 5, 2014

நதியும் நிலமும்






தொடாமல் 
தொட்டில் கட்டி
நிலவை மடியிலே 
தாலாட்டுது நதி வெள்ளம் !

காலில்லா நீ
நூலால் இறங்கினாயா?
வாலில்லா பட்டமாக
அறுந்து விழுந்தாயா?
தொட்டுவிட்டுச் சென்றவனை
எட்டிப்பிடிக்க வந்து
முடியாமல்
துடியாய் துடிக்கிறாயா?
நதி முகத்தில்
பொட்டு வைத்து அது
நாணுவதை
காண்கிறாயா

திரியின்றி எரிந்தாலும்
தெளிவாக தெரிகின்றாய்

தண்ணீரில் தவழ்கிறாய்
தரையுடன்  கோபமோ?

0 கருத்துக்கள்:

Post a Comment