நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Saturday, May 17, 2014

ஏருவைச் செய்தல்-











நிந்தவூர் மற்றும் அதனை அண்டிய நெல் விவசாயம் செய்கின்ற ஊர்களில் "ஏருவை செய்தல்" எனும் ஒரு பதம் செய்யப்படும் செயலைக் குறித்து வழக்கிலிருந்தது.

இன்றைய சந்ததியினர் மத்தியில்இச்சொல் வழக்கொழிந்திவிட்டது என்றே சொலலாம்.உளவு இயந்திரங்கள் கமத்தொழிலில் பெருமளவில் அறிமுகமாவதற்கு முன்னர்,மாடுகள் மூலம் வயலுழுத காலம்தொட்டே இந்தச்சொல் நடை முறையில் இருந்தது.

வயல் விதைப்பது முதல் அந்த வயலுக்குரியமுளை, எரு, படங்கு,சாக்கு போன்றவற்றை ஏற்றி இறக்கும் வேலைகள் அனைத்தையும் குறித்த மாட்டு வண்டி உரிமையாளர் பொறுப்பெடுத்துச்செய்வார். விளைந்த நெல்லை ஏற்றி வீடு கொண்டுவந்து சேர்க்கும் வரை பனி தொடரும்.உழுவதற்கும், பலகை அடித்து சேற்று வயல் மட்டப்படுத்துவதற்கும் கூலி வேறாகக் கொடுக்கப்படும்.

இவ்வாறு பொருத்தத்தில் செய்யப்படும் வேலைக்கு கூலி வயல்விளைந்து விளைவின் ஒவ்வொரு அவணம்( 2 1/2 மூடை) நெல்லுக்கும் வயலின் தூரத்தைப்பொறுத்து 1 1/2 அல்லது 2 மரைக்கால் வீதம் கணக்கிட்டு கொடுக்கப்படும். உளவு இயந்திரங்கள் பரவலாக பாவனைக்கு வந்ததில் இருந்து இந்த ஏருவைச்செய்யும் விடயம் படிப்படியாக இல்லாமல் போய்விட்டது.மாட்டு வண்டிகளின் உபயோகமும் படிப்படியாக குறையலாயிற்று.









0 கருத்துக்கள்:

Post a Comment