நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Wednesday, May 21, 2014

முயலப்பா நீ ஆமையில்லை!





செயலாண்மை இல்லாது
வேளாண்மை விளைவதுண்டோ
மேலாண்மை இல்லாமல்
யாரேனும் வென்றதுண்டோ?

முயலாமல் இருந்துவிட்டு
முடியாது என்கின்றாய்
முயன்று வென்றோரை
குறை கூறித்திரிகின்றாய்!

இயலாதது ஏதுமில்லை
இது எழுதாத நியதியடா
செயலிலே சீர் இருந்தால்
நீ அடைவாய் வெற்றியடா!

அண்ணாந்து நீ படுத்தால்
அன்னமுன்னை அடைந்திடுமா
புண்ணாக்கு என்றாலும் நீ
போய்த்தானே தின்ன வேணும்!

புரியாத புதிரில்ல பூமியிலே நீ
அறியாததும் ஏதுமில்லை அவனியிலே
திரியாக நீ எரிந்து
உன் தானியத்தை நீ பொறுக்கு!

நிறமெல்லாம் நிறைந்திருக்கு
ஒரு கருக்கூட துணையிருக்கு
உரங்கொண்டு நீ வரைந்தால்
சித்திரமாய் சிரித்து விடும் !

உன்பேரும் உயர்ந்துவிட
நல்வாழ்வும் தேடி வரும்
உல்லாசம் உடனிருக்கும் உள்ளத்தில்
சந்தோசம் ஊஞ்சலாடும் !

உமர் அலி முகம்மதிஸ்மாயில்
21st May 2014

கருக்கொடுத்த நண்பர் றாபி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

0 கருத்துக்கள்:

Post a Comment