நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Saturday, May 10, 2014

வள்ளம்போல மனது- பாடல்

வள்ளம்போல மனது தள்ளாடுது
கள்ளி உன் முகம்தை தேடுது
வண்ண மலரிடையே புகுந்தாயோ
பள்ளி கொள்வதுபோல் நடித்தாயோ?

துயில் கெட்டுத் தவிக்கிறேன்
மயில் தொகை தேடுறேன்
ஒயிலாட்டம் உன்னழகு
குயிலாட்டம் உன்பேச்சு !

நெடுஞ்சாலை போல உந்தன்
கூந்தலடி
சாஞ்சாடி கதைகள் பல சொல்லுதடி!
நெடுந்தூரம் ஓடி வந்தேன்
உன் வழியே
பூஞ்சோலை புகுந்தாயோ
என் விழியே!
கொடும்பாவி எரிக்குதடி உன் உருவம்
மனம் படும்பாடு உனக்கும்தான் புரியுதாடி?

கத்தரிக்கும் உன்விழிகள்
சுட்டெரிக்கும் தேவைப்பட்டால்
சித்தரிக்க வார்த்தையில்லை
மாட்டிக்கிட்டேன் உன்வலையில்!

மெட்டியில்லை கால்விரலில்
சுட்டியில்லை நெற்றியிலே
ஓட்டியில்லை கழுத்தினிலே என்
புத்தியில்லை என்னிடமே


எங்கு சென்றாய் என்கனவே
என் கனவை கொய்து கொண்டு
அந்த இடம் வந்திடுவேன்
தந்து செல்லு உன் உயிரை !

உமர் அலி முகம்மதிஸ்மாயில்
2014 may 10

0 கருத்துக்கள்:

Post a Comment