நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Sunday, May 25, 2014

இலக்கணம் !

நாமிருந்தோம் பகுபதமாய்

சொல்லாக்கம் செய்கையிலே
திணை மரபு தழுவினோம்
நல்லாத்தான் சினை குணமும் கூறி
தித்திப்பாய் பழகினோம்

விகுதியாக நான்
பகுதியாக நீ
சொற்பகுப்பு நடக்கையிலே
எனை விட்டு நீ பிரிய
பொருளற்றுப்போனேன்
இருளாற்றில் நடந்தேன்!
சந்தி இடைநிலை
சாரியை விகாரத்துடன்
ஆறாகப்பிரிந்தோம்
அது ஆறாத துயரமடா
அங்கே இறை அருள்கூட இல்லையடா
இல்வாழ்வில்
நிதம் கரை புரண்டது தொல்லையடா
நல்வாழ்வு கண் கடந்தே போனதடா!

பொருளற்ற சொல்லெனினும்
இனி பகாப்பதமாய் இருப்போமா
பொருளெல்லாம் ஈட்டி
இறை அருளையும் கேட்டு
இணை பிரியாமல் வாழ்வோமா ?
உமர் அலி முகம்மதிஸ்மாயில்
2014 May 25

0 கருத்துக்கள்:

Post a Comment