நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Thursday, May 22, 2014

ஏரும் ஊரும்!





கொல்லையில் உள்ளது
தொல்பொருள் சாலை
இல்லையே இப்பெல்லாம்
ஏர் பூட்டிடும் காளை!

வளர்ந்த உலகினிலே
விளைந்த வயல்களெங்கே
உழுத மனிதனுக்கு
நடந்த மாயமென்ன
நம் நிலைக்கு விலையும் என்ன

ஏரும் இல்லை மாடும் இல்லை
நானும் நிலம் உளுவேனா
நீரும் இல்லை மழையும் இல்லை
நானுக்கு தெரிந்தேனா

இயந்திரங்கள் பெருகி வர
ஏரேல்லாம் மறைந்தனவே
எடுத்து தூரப் போட்டோம்
இனி எடுக்க இல்லை நினைப்பு
யாரும் எடுக்க மாட்டோம்
மெசினால் வந்த விளைவு!!

மண்ணுழவும் மாந்தரெல்லாம்
பொன்னிலத்தை மறந்து விட்டார்
தன்னிலையை மறந்திங்கு
மண்ணெல்லாம் மாடிகளை
கட்டி விட்டார் !
மரங்களையும் அழித்துவிட்டார்!
மனிதா எல்லாமே மாற்றிவிட்டாய்

வயல் உழுது மகிழ்ந்திருந்தாய்
பயிர் விளைய பாத்திருந்தாய்
உழுதால் வயலும் விளையும்
உழவை வெறுத்தால் உணவு எங்கு விளையும் ?
பயிரும் உயர்ந்து வளரும்
முன்புபோலே இன்று வளர்வதில்லை

ஏரேடுத்து எருதில் பூட்டி
நீரைக்கட்டி பயிர் செய்வோம்
போர்தொடுத்து கதிரறுத்து
உழவு செய்து மகிழ்ந்திடுவோம்
நல் வாழ்வு வாழ்ந்திடுவோம்!
நாமும் நல்வாழ்வு வாழ்ந்திடுவோம

கருவை தந்த நண்பர் றாபி(கவிதை வயல்) அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

உமர் அலி முகம்மதிஸ்மாயில்
2014 May 22

0 கருத்துக்கள்:

Post a Comment