நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Wednesday, May 28, 2014

வகுப்புவாதம்?

நான்
சுவாசிக்கும் காற்றைத்தானே
நீயும் சுவாசிக்கிராய்!

உனக்குள் மட்டும் என் இப்படித்
திமிர்?

நீ குடிக்கின்ற
நீர் மட்டும் ஏன்
குருதி நிறமாக இருக்கிறது?

மனித இனம்
ஏன் உறுஞ்சுகின்ற
ஊரும் அட்டைகளாக
ஓட்டிக்கிடக்கின்றது?

பாதணி
உன் பாதங்களை காக்கத்தான்
எங்களை மிதிக்க அல்ல!

எங்களின்
அனுமதி இன்றியே
எங்களை
அடிமைப்படுத்திய
கொடூரரே
இனி இரப்பதில்லை
எடுப்பதே தீர்வு!

உங்களிடம்
கெஞ்சிக் கெஞ்சியே வாழ்கின்றோம்
மிஞ்சியிருக்கும் காலமும்
அப்படியிருக்காது.!

எச்சரிக்கிண்றோம்
எமது முன்னோர்களை
பாடசாலையை நெருங்க விடாமல்
நீங்கள் மட்டும் படித்தது போதும்

நாங்களும் படிப்போம்
உங்களைத்தோற்கடிப்போம்
புதுப் புது
குழாய்கள் கொண்டு
எங்களை நாங்கள்
நனைப்போம்
வெற்றியில் களிப்போம்!

மண்டியிட்டு
வளைந்துபோயிருக்கும்
எம் முள்ளந்தண்டினை
நிமிர்த்தி
முயற்சி அம்பு தொடுத்து
சுதந்திரப்
போர் செய்யப்போகின்றோம்!

எங்களை
நீங்கள் மதிக்காதவரை
உங்களை நாங்கள்
மிருகங்களின்
மந்தையிலிருந்து
பிரிக்க மாட்டோம்!

உங்களுக்குள்
பிரிவினைப்புற்று வளரும்
அதிகாரப் போட்டி
உங்களது அழிவினைத் தூண்டும்!

அன்று
உங்களது
ஆணவ மாளிகைகளில்
அச்சப் புயலுடன்
அனல்காற்று வீசும்
அதுவே எம் வாழ்வின்
கன்னித் தென்றல்!

ஒட்டுண்ணிகள்
செத்துப்போகும்
எட்டி மிதிப்போர்
கிட்ட வரார்

நட்ட செடிகள்
நலமாகவே வளரும்
அந்த நாளில்

அன்று
இன்றுபோலன்றி
நாங்கள் உண்மையில்
சுதந்திரமாய் சுவாசிப்போம்
சிந்திப்போம்!

0 கருத்துக்கள்:

Post a Comment