நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Wednesday, May 7, 2014

வட்டி


















வட்டி !

மூசை சப்பி முழுதும்
அப்படியே அழிந்துபோன
கோசுவை வயல்
குத்தகைக்கு எடுத்தகடன் !

மூத்த மகள் காத்திருக்காள்
வயதோ வளருது மூங்கில்போல
வலிய வந்த மாப்பிள
நழுவி போகாம உடனடியா
கலியாணம் பண்ணவேண்டி
ராவோடு ராவா
அந்தத்தெரு ராசாக்கிட்ட
அவசரமா பட்டகடன் !

சின்ன மகனின்
சின்னத்துக் கல்யாணம்
சிறப்பாக நடத்திடவே
சிறிதாக வாங்கியது

ஆதனம் வாங்கவில்ல
சீதனம் கொடுக்கத்தான்
ஊதாரி வாப்பா
ஒழுங்கின்றி பட்ட கடன்

உள்நாட்டு வெயில் பிடிக்காதாம்
வெளிநாட்டிலதான் காயணுமாம்
படித்துவிட்டு படுத்தெழும்பும்
எங்கள் வீட்டு முடிசூடா மன்னன்
வெளிநாடு செல்ல வீசா வந்தபோது
மீசைக்காரனிடம் நைசாப்பேசி
நயமாக பட்ட கடன்!

எல்லாக் கடனும் வட்டியோடு
குட்டிபோட்டு அந்தக்
குட்டியின் குடும்பமும்
குட்டிபோட இறுதியில்
இருந்த வளவு உறுதியும்
அறுதியாகி அடுத்தவன்
தாழ்வாரம் ஒதுங்கும் வரை
வட்டி கட்ட முடியாமலே போனது!

வானம் அழுவது சிலகாலம்
இறையைத்தொழுவதும் ஐநேரம்
ஏன்தான் வாங்கினோம் என்றிவன்
அழுவதோ முழு வாழ்நாழும்!

பதறப்பதற பறித்தெடுப்பான்
கடன்காரன் ,ஒற்றிப் பத்திரம்
பற்றிக்கொண்டு சட்டத்தின்
படியேறி போர் தொடுப்பான்!

மண்டு மனை எல்லாமே பறிபோகும்
பிள்ளை குட்டி பெட்டி படுக்கை
சகிதம் முழுக்குடும்பமே வெளியேறும்!

கொடுத்தவன் பறித்தெடுத்தான்
அடுத்தவன் பரிதவித்தான்

துலா எழுந்து எழுந்து
விழுது கிணற்றனுள்ளே
கடனாளி மனம் விழுந்து விழுந்து
புரளுது துன்பச் சேற்றினுள்ளே!

வட்டியில் மூழ்கிடும் குடும்பத்தை
கரையேற்றி கரைசேர்க்க
வட்டியல் கடந்தாள் வீட்டுப்பெண்
விமானமும் ஏறினாள் நாட்டுப்பெண்!

உமர் அலி முகம்மதிஸ்மாயில்
2014 05 07

வட்டியல்- வாசல்படி
ஒற்றி-அடகு
மூசை -நெற்பயிரைத்தாக்கும் ஒரு வகைப்பூச்சி — with Valli Muthu, Moiden Syed,Sunandha Prabha and 46 others.


Tag PhotoAdd LocationEdit
Like · · Stop Notifications · Share · Edit



Mohamed Mursith, S Shifani Mohamed, Abdul Haiyand 59 others like this.

5 shares


Logesh Velu nice
Yesterday at 3:48pm · Unlike · 1


Valli Muthu எதிர்கால கனவுகளோடு வாங்கும்கடன்... பலரின் எதிர்காலத்தையே அழித்து விடுகிறது... கவிதை மிகமிக நன்று...
Yesterday at 4:18pm · Unlike · 1


Rathy Srimohan சுமை தாங்கி ஒன்றின் வலி கவியூடு தெரிகிறது.......! நெஞ்சை நெகிழவைக்கும் வரிகள்.....! அருமை!
Yesterday at 4:21pm · Unlike · 1


Rameeza Mohideen Yaseen ஒவ்வொரு வரியும் மனதை ரணமாக்க... வட்டியால் குடும்பம் அழிந்து அலங்கோலப்படும் நிலையில் வடித்து ...தந்தை பெற்ற கடன் மகளின் தலையில் விடிய., பாவம் நங்கையவளோ சுமைதாங்கியாய் நாடு விட்டு நாடு செல்லும் பரிதாப நிலை கவி வரியாய்.அனைவரிற்கும் நல்ல பாடமாய்! அருமை கவிஞரே!
Yesterday at 4:24pm · Unlike · 2


Senthil Kumar · 8 mutual friends
Arumaiyaa'na...unarv'u pathiv'u indru! ealai'yin unmai `nilai' idhu thaan! vaalvu...kavignarea!maalai!vanakkam.
Yesterday at 4:36pm · Like


Mohamed Ismail Umar Ali உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி கவிஞர்களேValli Muthu,Rameeza Rameeza Mohideen Yaseen,Rathy Rathy Srimohan,Logesh Logesh Velu
Yesterday at 4:37pm · Like


Shafath Ahmed Wonderful..wonderful..நீங்கள் இதுவரையில் எழுதிய அருமையான கவிதை வரிகளுக்குள் என்னை மிகவும் பாதித்த கவிதை இது..வரிகளைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத அளவுக்கு கச்சிதமாக அமைத்திருக்கிறது. வார்த்தைகள் சில நேரங்களில் வந்து விழுவதில் பிரசவ வலியாய்த் தோன்றும். இக்கவிதையில் சொல்லப்பட்ட சில விடயங்கள் கடல்கடந்த நாடுகளில் இருந்துகொண்டு உங்களது கவிதையைத் தரிசிக்கும் சகோதர சகோதரிகளுக்கு தெளிவில்லாமல் இருக்கும் ..பின்குறிப்புகள். அவசியம். மானுடத்தின் அவலங்களைப் பாடுவதில்தான் ஒரு படைப்பின் ஆயள் ஜொலிக்கும். Excellent..Umar Ali..vry excellent.
Yesterday at 4:39pm · Unlike · 6


Mm.mohamed Kamil ரெம்பவும் யதார்த்தமானதும் உணமையனதுமான பதிவு இது ..!! உங்களது ஆக்கங்களுக்காக மீண்டுமொருமுறை எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் உங்களது கவித்துவமிக்க வரிகள் ஒவ்வொன்றும் இழந்து விட்ட நினைவுகளை மீட்டிப்பார்க்க உதவுகின்றது தயவு செய்து இதை நூலுவில் உருவாக்க பணிவுடன் வேண்டுகின்றேன்.
Yesterday at 4:41pm · Unlike · 2


Athambawa Waakir Hussain excellent words.....
Yesterday at 4:42pm · Unlike · 1


Mohamed Ismail Umar Ali Shafath Ahmedஉங்கள் யதார்த்தபூர்வமான விமர்சங்களை நான் மனதார ஏற்றுக்கொள்கின்றேன்,முடிந்தவரை பிற்குறிப்புகளை இட்டுவருகின்றேன்,இன்னும் சேர்த்துக்கொள்ள முயல்கின்றேன்,நன்றி . சகோதரரே நூலுருவில் உருவாக்குவது அவ்வளவு இலகுவான விடயமல்ல வெளிநாட்டு வாழ்க்கை இன்சா அல்லாஹ் முற்றுப்பெற இருக்கின்றது அதன்பின் முயற்சி செய்ய நினைத்திருக்கிறேன்,அல்லாஹ் துணை புரியட்டும்,நன்றி Mm.mohamed Kamil,நன்றிAthambawa Waakir Hussain
23 hours ago · Like · 2


Aslim Mohamed · Friends with Ilham Bkm and8 others
nice,
23 hours ago · Unlike · 1


Ibra Lebbai Tan nilai thanariyamal kadan paddu apalaikul agum appavi makkal nilayathay unarvu purvamaga ungal varigalil azagura kuorullergal. Shodkal varigal anaithume adputham,Arumay.!Vazthukal miu ali avarkale.
23 hours ago · Unlike · 1


Elilnila Vinotharan · 2 mutual friends
Arumai! Unmai!
22 hours ago · Unlike · 1


Meera Mahroof ”வானம் அழுவது சிலகாலம்
இறையைத்தொழுவதும் ஐநேரம்
ஏன்தான் வாங்கினோம் என்றிவன்
அழுவதோ முழு வாழ்நாழும்!”

-கடன்பட்டார் நெஞ்சம்போல கலங்கினான் இலங்கை வேந்தன்-
இது இராமாயணத்தில் வரும் இராவணனைப் பற்றிய வரிகள் என்று நினைக்கிறேன். கடன் எவ்வளவு கொடுமையாது என்பதை விளக்கி நிற்கிறது.

-நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு நேர தொழுகையின் இறுதியிலும் கடன்தொல்லையில் இருந்து பாதுகாப்பு தேடுமாறு போதித்து உள்ளார்கள்-

உங்களது இடுகையை வாசிக்கும்போது நினைவு வந்தது.

யதார்த்தமான இடுகை. வாழ்த்துக்கள் உமர் அலி.
20 hours ago · Unlike · 2


Ganesh Gajine அருமையான வரிகள் நண்பா
20 hours ago · Unlike · 1


Govind Dhanda Unnmai ippadithaan kadan pattu kanadaikka vendiyullathu!
20 hours ago · Unlike · 1


Abdul Hamed E Sahurudeen .
தேவைக்கு அதிகமாய் நினைப்பதால் இந்த
தேவையில்லாத தொல்லைகள் நம்மை
தேடிவந்து கைகுலுக்க வருங்காலம் தனை
அறியாமலே நாம் வரவேற்று வாழ்கிறோம் ,
வட்டியின் குட்டியால் சிதைந்தது சின்ன குடிலும்

தேவையறிந்து வாழாமல் பிறரின் பார்வை
அறிய வாழ நினைப்பதால் இந்த பிரச்சனை
வட்டியால் வரும் வருத்தங்களை சிறிதாய்
பட்டியலிட்ட விதம் அருமையிலும் அருமை ,,,,
20 hours ago · Unlike · 4


Dawood Ahamed துலா எழுந்து எழுந்து
விழுது கிணற்றனுள்ளே//..அற்புதமான சொல்லாடல்...வாழ்த்துக்கள்.
19 hours ago · Unlike · 1


Kalaimahan Fairoos அற்புதமான வரிகளைக் கொண்டுள்ளது தங்களின் வட்டிக் கவிதை.. எனது கவிதையையும் இணைக்கிறேன்.. (மன்னிக்கவும்)
19 hours ago · Unlike · 1


Kalaimahan Fairoos சிறுதுளி வட்டி
பெருந்துளி வட்டியாய்
சுமக்கவியாலத
பெரும்பாரத்தை தரும்…
எழுதியவனுக்கும்
கொடுத்தவனுக்கும்
பெற்றவனுக்கும்
அந்தோ பெருஞ்சத்தம்
அவர்களின் அலறல்…
நரகில் வீழ்ந்து மடிந்து
மடிந்தெழுகின்றனர்…

ஐயகோ…
வேண்டவே வேண்டாம்
நரக வட்டி….

-தமிழன்புடன் கலைமகன் பைரூஸ்
19 hours ago · Unlike · 1


Mohamed Ismail Umar Ali பாடல் வரிகளுடன்,நபிமொழியையும் சேர்த்து உணர்த்தி கருத்துக்கூறிய Meera Mahroofசேர் வர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்,கவிக்கருத்திட்ட கலைமகன்Kalaimahan Fairoos,சகோதரர் Dawood Ahamed ,Abdul Abdul Hamed E Sahurudeen,GaneshGanesh Gajine,Govind Govind Dhanda,Elilnila VinotharanIbra Lebbai,Aslim Mohamed, உட்பட அனைத்து நண்பர்களுக்கும் பகிர்ந்துகொன்டவர்களுக்கும் ,விருப்பிட்டவர்களுக்கும்நன்றிகள்
18 hours ago · Like


Kavikkuzhanthai Kavikkuzhanthai அழகான முறையில் நடைமுறையை கவி புணைந்துள்ளீர்கள் சகோதரரே!
வட்டியின் யதாரத்தத்தை விளங்கியவர் எவரும் அதன் வாசமே நுகரமாட்டார்!
அள்ளாஹ் எம் அனைவரையும் பாதுகாத்துக் கொள்ளட்டும்! ஆமீன்.
16 hours ago · Unlike · 1


றாபியின் கிறுக்கல்கள். Superior nanpa
15 hours ago · Unlike · 1


Natarajan Gopal · 6 mutual friends
மூசை என்பது எது?
10 hrs · Unlike · 1


Ahsan Mim வரிகள் அல்ல இவை வறுமையின் வலிகள் ... வட்டியை ஒழிக்க அனைவரும் வல்லோன் வழி வாழவேண்டும் ..."சகாத்"...வறுமைக்கான தீர்வு ...
9 hrs · Edited · Unlike · 1


Mohamed Ismail Umar Ali Natarajan Gopalகவிதையின் முடிவில் குறிப்பிலும் சுருக்கமாக கூறியிருக்கிறேன்.மூசை என்பது ஒரு வகை சிறிய வெட்டுக்கிளி ,தத்தி, கபில நிறத்தத்தி ,அறக்கொட்டி என்றும் அழைப்பார்கள் ,நெற்பயிரை கதிர்ப்பருவத்தில் சாற்றை உறுஞ்சும்,,இதனால் நெல்மணிகளில் பாலேறாது, பாரமற்ற பதராகவே வரும்.சரியான பருவத்தில் சற்று அவதானம் குறைந்தால் தாக்கம் அதிகரித்து பெரும் நஷ்டம் ஏற்படும்.
8 hrs · Like


Mmed Amein aftermath of a person's plight is well described but, the poet failed to tell us how to get rid off from the dangerous 'interest' culture in the society.
8 hrs · Unlike · 1


Mohamed Ismail Umar Ali Mmed AmeinThanks machan, ina another poem we will touch the topic .In my view i found first the person who is getting money for loan for interest is to stop borrowing. he should realize himself and his capacity and work harder .for this all, education and awareness is very important. unwanted expenditures, exhibition life to be kept away. same time the mothers of young boys have to convenience their sons to marry without dowry house. also sakaath is the important matter.
8 hrs · Like · 2


மா.சித்ரா தேவி வட்டியின் விபரீதம் ம்ம்ம்
4 hrs · Unlike · 2


S Shifani Mohamed வாட்டி வதைக்கும்
வட்டி
வசனங்களில்
வளைந்தோடும்
உண்கைள்
உணர்வுகள்
இன்னல்கள்
யதார்தங்கள்
மனதை தழுவி
செல்கின்றன
அருமை சகோதரரே
2 hrs · Unlike · 1


Natarajan Gopal · 6 mutual friends
நன்றி அய்யா.பறப்பவற்றை எல்லாம்’முசு’ என்றனர் சுமேரியர்கள் .அதற்க்கான தமிழ் சொல் தேடிக்கொண்டிருந்தேன்.
1 hr · Unlike · 1

0 கருத்துக்கள்:

Post a Comment