நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Saturday, May 31, 2014

சீனிப்புண்!



சீனிப்புண்!

தசாப்தங்களாக
நானும் சர்க்கரை வியாதியும்
இணைபிரியாத நண்பர்கள்
உள்ளுக்குள் எதிரியாயிருந்தும்
கைவிடாத நட்பு!

ஊசியும் குளிசையும்
உருப்படியாக எதையுமே
சாதிக்கவில்லை
ஏசியும் பேசியும்
என்னை என்னாலேயே
திருத்தவும் முடியாமல் போயிட்டு!

வைபவங்களில் அதிதியாகினும்
அதிகம் எதையும் உண்ண முடியல
இனிப்புகளை என் கண்கள்
ஈயாகவே மொய்க்கும்
கைகள் எடுக்க எட்டினாலும்
மெய்யுணர்வு தட்டிப்பறிக்கும்!

இப்படித்தான் வாயக்கட்டி வயிற்றைக்கட்டி
எந்நாளும் வாழ்ந்தாலும்
எப்படியோ சீனி கூடித்தான் போகிறது!

உணர்வு மரத்த காலில்
எரிஞ்ச தணல் பட்டதோ
நெருஞ்சி முள் தைத்ததோ
தெரிஞ்சிக்க முடியல
இனி தெரிஞ்சாலும் பலனில்லை
வந்தது வந்ததுதான்!

குருவிச்சம் பழம்போல
பளபளப்பா செக்கச்செவேலென்று
சிவந்தகாலில் சிறு வீக்கமும் வந்தது
பெரிசா எடுக்கல நான்
கரிசனையும் காட்டல

லேசான கணகணப்பு
உடம்பில் கொஞ்சம் இளஞ்சூடு
பேசாம இருந்திட்டேன்
ரெண்டு பனடோலை போட்டுக்கிட்டு

நாட்கள் நடந்தன
இல்லை இல்லை வேகமாக ஓடின
நீலகண்டன் நிறம்போல
நிறம்மாறி வந்தது
இதுவரை கண்டுகொள்ளா மனம்
இதுகண்டு
பயந்து திடுக்கிட்டு விழித்தது!

அதுக்கிடையில் அது புரையோடி
போயிருக்க பொங்கி வழிந்தது
பாதம் புண்ணாகி
பொதும்பி இருந்தது!

வெதும்பின மாம்பிஞ்சாய்
அழுகி வடிந்தது
வெள்ளையுடன் செந்நிறமாய்
வெடுக்குடனே ஏதோ ஒழுகி வழிந்தது!

எனேக்கே சகிக்கல
அப்படி ஒரு வெடுக்கு
என் கண்ணே அதைப்
பார்க்கவும் விரும்பல!

இப்படி இருக்கையில
பெற்றபிள்ளை நெருங்கிடுமா
இல்ல உற்றார்தான்
தொடுவாரா?

கட்டியவர் மட்டும்தான்
தொட்டுத்தூக்குகிறார்
என்னை கட்டிக்கிட்டு அழுகின்றார்
பட்டுக்கிட்டு இழுக்கின்றார்!

ஆனால்
பனங்கொசுவும் பழ ஈயும்
கூப்பிடாம வந்திருந்து
சிற்றுண்டி உண்டு
புண்ணுடன் சிரித்திப்பேசிக்கிட்டு
கட்டிப்புரள்கிறது
துரத்தினாலும் போகாமல்
எனைச்சுற்றி வட்டமிட்டு பறக்கிறது!

எல்லார்க்கும் நான் கசக்க
இதுக்குமட்டும் இனிக்குதாக்கும்!
தலைவிதியை வைதுகொண்டு
விசிறுகிறேன்
பனையோலை விசிறியினால்!

மு.இ..உமர் அலி
31 May 31
 — with Dawood AhamedEra Perummal,Govind Dhanda and 45 others.
LikeLike ·  · Stop Notifications · Share · Edit
  • Thirugnanasampanthan Lalithakopanஎன்னால் முடியல்ல கருத்து சொல்ல நாளாந்த அனுபவத்தின் சுவடு இது
  • Noormohamed Sams yatharthhamanathu
  • Rameeza Mohideen Yaseen என்னத்த சொல்ல?
    அனுபவிப்பவர்களின் வலி அவர்களுக்குத்தான் புரியும்
    உணர்வு மரத்த காலில்
    எரிஞ்ச தணல் பட்டதோ
    நெரிஞ்சி முள் தைத்ததோ
    தெரிஞ்சிக்க முடியல்ல
    இனி தெரிஞ்சாலும்
    பயனில்லை. வலியின்
    உச்சம்!அபாரம்
  • புலவூரான் ரிஷி கர்ணன் ஒரு நோயை இப்படிக்கூட‌
    புரிய வைக்கலாம்
    என்று உணர்த்தியதற்க்கு மிக்க‌
    நன்றி....

    பனங்கொசுவும் பழ ஈயும்
    கூப்பிடாம வந்திருந்து
    சிற்றுண்டி உண்டு
    புண்ணுடன் சிரித்திப்பேசிக்கிட்டு
    கட்டிப்புரள்கிறது
    துரத்தினாலும் போகாமல்
    எனைச்சுற்றி வட்டமிட்டு பறக்கிறது!

    எல்லார்க்கும் நான் கசக்க
    இதுக்குமட்டும் இனிக்குதாக்கும்!
    தலைவிதியை வைதுகொண்டு
    விசிறுகிறேன்...

    மிக அருமை அண்ணா
  • Mages Vari · Friends with Ssm Rafeek and 2 others
    Arumai arumai
  • Mahdiya Ameen · 2 mutual friends
    Neerilivu noyalin 
    Nonda manasai
    X ray eduththadu pol
    Thulliyamaha 
    kavidai
    Padam pidiththu kaati
    Ulladu arumai.. 
    nondu noolahi pona noyalien pun aaravidinum manam
    aarum nichchayam
    Ik kavidai paarthu...
  • Kalia Nthna · 3 mutual friends
    சீனி வியதிகள் எப்படி என்பதுதை உனர்த்துகிறது உங்கள் கவிதை கவிதைகள் காதல்லையும் பெண்கள்ளையும் வைத்துதான் வறைவதை நான் படித்தேன் இந்த கவிதை அனைத்தையும் மிஞ்சியது நன்றி
  • Ratha Mariyaratnam சகோதரர் உமர் அலியின் கவிதைகள் வாழ்வியலை யதார்த்தமாக கூறும்.....குருவிச்சையும், காளானும் , சொல்லிடுமெ கதைகள்...கோழியும் முட்டைகளும் சொல்லிடுமே ஏழ்மையை, கை கழுவி விட்டு நழுவி ஒடுபவர்கள் மத்தியில் கை கழுவாமல் விட்டால் வரும் தீமை பற்றி கவிதையே சொல்லுமே......காதலுக்கு கவி எழுத ஆயிரம் ஆயிரம் கவிஞர்கள் இருக்க சமூக நலனும் ,நாளைய சந்ததிகளையும் எண்ணி கவிதை எழுதும் சகோதரனுக்கு வாழ்த்துக்கள்......எனது தாய் இதன் காரணத்தால் இறந்தா.....அருமையான விளிப்புணர்வு ்
  • Abdul Majeeth · 17 mutual friends
    .
    Kalia...solwathu
    100/100 unmai...
    Kaathalum pengalumae
    Ippothu
    Kavithayagivittathu...
  • Abdul Majeeth · 17 mutual friends
    .
    Kavithai Initathu
    Noey pulitathu...

    An noeyinindri
    Yellaa makkalayum
    Andavan kappanaaga...
  • தமிழினி கவிஞர் · 19 mutual friends
    வாழ்வியல் கவிதை...
  • Suresh Adimoolam · Friends withபொத்துவில் வளத்தை பயன்படுத்துவோம்
    விருதுக்கு பரிந்துரைக்க கூடிய வரிகள்... நீங்கள் சொன்னவிதம் எளிமை என்றாலும் படிக்கும் எங்கள் மனதில் வலி அதிகம்...
  • Si Va · 11 mutual friends
    Ithayam kanathathu..
  • Ravidrakumar Kumar · 4 mutual friends
    Yathartha unarvugal...
    Miga arumai. ..
  • Panneer Dass · Friends with தேவி பாலா and10 others
    unmai..
  • Mohamed Razad · 3 mutual friends
    Arputham ayya, Allah intha kodiya noyal pathikkapadda makkalukku kuna madaya seyyaddum, melum intha noyilirunthu nam anaivarayum pathukakkanum ayya....
  • Muneera Apmuhamed சீனி நோய்க்கு
    அளவில்லா தீனியும்
    அளவை மீறிய பீதியும்
    உரமாகி போக ்்்
    தொடர் வைத்தியமும்
    உளப் பைத்தியமும்
    போதையாய் தலைக்கேற
    தாறுமாறாய் 
    போகுமய்யா மருந்துக்கும்
    மருத்துவனின் சட்டை்பைக்கும்
    நீ சம்பாதித்த பணமட்டுமல்ல்்்
    உன்
    உன்னத
    உயிரும் கூட ்
  • Shafath Ahmed இயலாமை என்ற சொல் முழு வடிவம் பெறுகிறது.
    இன்னும் சொல்லப்படாத நோவினைகள் நிறையவுண்டு. இந்தக் கவிதையின் பாரம் சீனி வருத்தக்கார உள்ளங்களிடம் கேட்டால் மட்டுமே நன்கு புரியும்.அனைத்துமே நோவினைச் சொற்கள்.
  • Ibra Lebbai Thurai sarntha unarvu ungal sevayil yetthanayo yin noy thaluviyavarkalukku thatiyam purin thiruppeer kal. Vethanai kandu yiranki yiruppeerkal. Mattavarkalum yin noyk ku aalaha koodathu yenum mana neyam kondu yeziya nadayil azhahu tamizil amaittha yikkavithay kkum variyedda unkalukkum yen wazttukkal.
  • Rathy Srimohan பலபேர் தமக்கு சக்கரை நோய் இருப்பது தெரியாமல் வாழ்கிறார்கள்.....! ஒரு பரிசோதனை செய்து கொள்வது நல்லது..,,! இரத்தத்தில் சக்கரையின் அளவு பற்றி 6 மாத்த்தில் ஒருதடவையாவது பரிசோதனை செய்வது நல்லது சுகதேகியாக இருந்தால்கூட.,.,.!
  • Spampathy Alakaijah Nilojan · Friends withShibly Ahamed
    Atumajana poem.
  • Thirukkumar Thirunavukkarasu என்ன ஒரு அருமையான உணர்வுகளைத் தூண்டும் எழுத்துகள்.. கண்ணீர் வரவைத்தது. என் தகப்பனாருக்கும் இந்த வியாதி 40 ஆண்டுகளாக இருந்தது, அவரும் மிகக்காவனாமாக இருந்தவர்.. ஆனால் பிறகு ஒரு விபத்து, காலில் ஒரு காயம், அந்தகாயம் அவர் மறையும் வரை மாறவில்லை. இன்னும் அந்தக்காயம் என் கண்களுக்குள் இருந்து நீர் வடிக்கிறது..
  • Govind Dhanda Unmai appaavin kaalil vantha kaayam avarai kaanaavulakam azhaithu sentru vittathu!

    Kavithai padithu manam kanakkintrathu!
  • Ameer Mohamed வாழ்க்கையில் கஷ்டப்படும் காலத்தில் உண்ண உணவில்லை.கஷ்ட்டப்பட்டு உழைத்து சொத்து சேர்த்து வைத்தவுடன் ஆசையுடன் உண்ண வழி இல்லை காரணம்,சீனி வியாதி.யா அல்லாஹ் எந்த நோயாளிக்கும் வராத கஷ்டம்.யா அல்லாஹ் எம் அனைவரையும் நோயிலிருந்து காப்பாத்தி விடு.
  • Santakumar Palani · Friends with கவி முகிலன்
    அருமையான வரிகள் நோயின் தன்மையை அழகான கவிதையக வடித்துள்ளீர்கள்...அருமை தோழி!
  • Rups Robin உண்மையாய் நோயின் தன்மையை விளக்கி உள்ளீர்.. நன்று.. உண்மையிலே வேதனை மட்டுமே மிஞ்சியது.. கொடுமையான நரகம் இந்த நோய்..
  • Rijan Muhammadh வரிகள் அழகு, வலிகள் தனது,

0 கருத்துக்கள்:

Post a Comment