நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Thursday, May 15, 2014

பாப்பாக்களுக்கு ஒரு பாடல்!-கிளிப்பாட்டு

பாப்பாக்களுக்கு ஒரு பாடல்!


பச்சைகிளியே பச்சைக்கிளியே
பாடிப் பறந்துவா
இச்சை தீர பாலும் பழமும்
தேடித்தருகிறேன்!

வெள்ளை முயலே வெள்ளை முயலே
துள்ளி ஓடிவா
அள்ளி உனக்கு மெத்தைப் புல்லை
நானும் தருகிறேன்!


பிள்ளை அணிலே பிள்ளை அணிலே
தாவி ஏறி வா
வெள்ளைச் சோறு தட்டில் வைத்து
உண்ணத்தருகிறேன்!

உமர் அலி முகம்மதிஸ்மாயில்
2014 May 15

0 கருத்துக்கள்:

Post a Comment