நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Friday, May 23, 2014

காட்டை வெட்டி வீழ்த்தாதே





காட்டை வெட்டி வெட்டி வீழ்த்தாதே
கோட்டை கட்டிக்கட்டி உயர்த்தாதே
மரம் விற்ற பணமுனக்கு உதவினாலும்
மரம் வீழ்ந்த ரணமுனக்கு புரியாதே!

ஓடியுழைக்க எத்தனையோ வழியிருக்கு
காடழிவிலே பெரும் வலியிருக்கு
நாடு முழுக்க காடு கொள்ளை போகுதே
நம் வாழ்வில் கனத்த தொல்லைவருதே!

அரிந்த மரத்துக்கு உன் அப்பாவின் வயது
தெரிந்தும் வயதில் நீ நட்டாயோ ஒரு மருது
தெரிந்து தெரிந்து அரிகின்றாய்
தீமை என்றறிந்தும் காட்டை அழிக்கின்றாய்!

அடர்ந்த காட்டிலே உன் அடாவடி
அதனால் அழுது பிறந்ததே பல புல்வெளி
தொடர்ந்தும் கேட்டுக்குள் விழகின்றாய்
பின்னர் மாட்டிக்கொண்டு நீ அழுகின்றாய்!

பாலைக்காட்டிலே பழம் பழுத்திருக்கும்
சோலைக்குயிலுந்தான் கூவி பறந்திருக்கும்
நாளை காட்டிலே எதுவிருக்கும்
சோலையின்றி குயிலெங்கே தங்கியிருக்கும்?

காட்டுக்களவினை நிறுத்தடா நெஞ்சில்
மனித நேயத்தை பொருத்தடா
சாட்டுக்கூறி நீ நழுவாதே
காட்டை திண்டு கையும் கழுவாதே!

உமர் அலி முகம்மதிஸமாயில்
2014 May 23

காட்டை வெட்டி வெட்டி வீழ்த்தாதே
கோட்டை கட்டிக்கட்டி உயர்த்தாதே
மரம் விற்ற பணமுனக்கு உதவினாலும்
மரம் வீழ்ந்த ரணமுனக்கு புரியாதே!

ஓடியுழைக்க எத்தனையோ வழியிருக்கு
காடழிவிலே பெரும் வலியிருக்கு
நாடு முழுக்க காடு கொள்ளை போகுதே
நம் வாழ்வில் கனத்த தொல்லைவருதே!

அரிந்த மரத்துக்கு உன் அப்பாவின் வயது
தெரிந்தும் வயதில் நீ நட்டாயோ ஒரு மருது
தெரிந்து தெரிந்து அரிகின்றாய்
தீமை என்றறிந்தும் காட்டை அழிக்கின்றாய்!

அடர்ந்த காட்டிலே உன் அடாவடி
அதனால் அழுது பிறந்ததே பல புல்வெளி
தொடர்ந்தும் கேட்டுக்குள் விழகின்றாய்
பின்னர் மாட்டிக்கொண்டு நீ அழுகின்றாய்!

பாலைக்காட்டிலே பழம் பழுத்திருக்கும்
சோலைக்குயிலுந்தான் கூவி பறந்திருக்கும்
நாளை காட்டிலே எதுவிருக்கும்
சோலையின்றி குயிலெங்கே தங்கியிருக்கும்?

காட்டுக்களவினை நிறுத்தடா நெஞ்சில்
மனித நேயத்தை பொருத்தடா
சாட்டுக்கூறி நீ நழுவாதே
காட்டை திண்டு கையும் கழுவாதே!

உமர் அலி முகம்மதிஸமாயில்
2014 May 23

0 கருத்துக்கள்:

Post a Comment