நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Wednesday, April 16, 2014

மூளை
















உள்ளம் உனக்குள்ளே 

உறங்குமிடம் அது 
கள்ளம் கபடமின்றி 
இயங்கும் வடம்!

சின்னன்சிறியதடா
உன் மூளை
பென்னம் பெரு உலகை
புரட்டுவதே அதன் வேலை!

மனித மூளை !

காட்டு மிருகமெலாம்
அந்த வீட்டுக்குள்ளே
வீட்டு விலங்குகளும்
அதன் கோட்டைக்குள்ளே !

வேளை பார்த்திருக்கும்
வெளியில் வர அப்போ
ஆளை அது உணர்த்தும்
அது ஊர் உணர!

பறக்கும் இரும்புகளை
படைத்ததடா
மிதக்கும் நாவாயும்
சமைத்தடா!

விண்ணை மண்ணுடனே
இணைத்ததடா
கண்ணை கட்டி வித்தை
புரியுமடா!

உறங்கும் வேளையிலும்
இயங்குமடா மூளை
உறங்கா விடின் உனக்கு
மனக் குழப்பமடா!

வெள்ளை கறுப்புனக்கு
பிரித்துரைக்கும்
உள்ளே இருந்து கொண்டு
பரிந்துரைக்கும்!

ஆனைப்பலம் இருந்தும்
வேலையில்லை
மூளை பலம் இழந்தால்
பலனுமில்லை!

கசக்கிப்பிழிந்தெடுப்பின்
உசந்திடலாம்
மனதில் உசந்த வீடுகட்டி
வாழ்ந்திடலாம் ?

உமர் அலி முகம்மதிஸ்மாயில்!
2014 04 16-100 ஆவது கவிதை வயலுக்கு எழுதியது.

0 கருத்துக்கள்:

Post a Comment