நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Wednesday, April 9, 2014

உணவும் மருந்தும்















அளவோடருந்தின்
விருந்தும் மருந்துதான்
மிதமிஞ்சிப் போய்விடின்
வருத்தும் வருத்தம்தான் !

அதிகம் ஆவென்று சொல்லும் வாய்
நோயை வாவென்று அழைக்குமடா!
ஆசை முழுதும் தணியாது போயின்
பாயில் உன்னை நோயாலே விழுத்துமடா!

மூத்தம்மா மூத்தப்பா
முன்னோர்கள் உண்டதெல்லாம்
மூலிகைச் சாப்பாடு
நாமெல்லாம் உண்பதுவோ
கேளிக்கைச் சாப்பாடு!

உணவகங்கள் பெருகி
உனது சுகம் அருகி
மருந்தகங்கள் போகிறாய்
மாத்திரைகள் போடுராய்!

பளபளக்கும் நஞ்சு
பல சுவைகள் நிறைந்து
உளம் சுவைக்கும் உவந்து
நலம் கெடுவது
புரிந்திடாமல் நின்று!

அளவாய் உணவருந்து
அதிகம் நீ நீரருந்து
தவிர்ப்பாய் நீ மருந்து!

                                        உமர் அலி முகம்மதிஸ்மாயில்

0 கருத்துக்கள்:

Post a Comment