நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Wednesday, April 2, 2014

அவள்!













அவள்
எனைச் சுழற்றும்
அச்சாணி!
ஏற்றி விடுவாள்
உச்சாணி!

அவள் கையில்
நான் பம்பரம்
அவளே
என் இகம் பரம்!

அவளொரு இன்னிசை
இருப்பதோ தென்திசை!

அவள் ஒரு நாற்று
தினமும் நீ நீரூற்று!

அவள் ஒரு தீ நாக்கு
அதையும் நீ இனிதாக்கு!

அவள் ஒரு தென்றல்
அழகான வீட்டின் முன்றல்!

அவளொரு காவியம்
நெஞ்சுக்குள் நீ வரை ஓவியம்!

அவளே உலகம்
உனக்குள் ஏன் கலகம்!

அவள் ஒரு அமைதியான அருவி
அருகே நான் இசை பாடும் குருவி!

அவள் ஒரு அமுது
நீ அவள் புகழ் எழுது!

அவளே மந்திரி
மதியூக தந்திரி!

மணம் கெடா மல்லிகை
என் மனம் தொட்ட அகலிகை!

சீரியது அவள் சிந்தனை
செய்யாதே நிந்தனை!

பொறுமை வந்து அவளிடம்
பகுதிநேரம் படித்துச்செல்லும்
வறுமை வந்து அவள்
சந்தோசம்
கொள்ளை அடித்துச்செல்லும்!

உருகி உருகியே
ஒளிதரும் அவள்
மெழுகு மட்டுமல்ல
நீ விழுகையில்
உனைத்தாங்கும்
விழுதுங்கூட!

மதிக்க முடியுமா விலை
மதித்து நடப்போம்
அவள் நிலை!

                                         
                                                                 உமர் அலி   முகம்மதிஸ்மாயில்

0 கருத்துக்கள்:

Post a Comment