நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Friday, April 11, 2014

சித்திரைப் புழுக்கம்




சித்திரைப் புழுக்கம்






காற்றும் மரங்களும்
சேர்ந்து ஊடல் பண்டிகையின்
உச்சக்கண்ட
கொண்டாட்டத்தில்!

நித்திரை தொலையுது
புற்றரை பொசுங்குது
புற்றுக்குள் இருக்கின்ற
சர்ப்பங்கள் கூட உஸ்ணத்தால்
உசும்புதது !

புழுங்கி வழியுது
மேனி வியர்த்து ஒழுகுது
நெளிந்து சுழிகிறோம்
கூனி குறுகிறோம்!

வீட்டு முற்றங்கள்
வெறிச்சோடிக்கிடக்கின்றன
தோட்டச்செடிகள்
முற்றுகைக்குள்ளாகி
செய்வதறியா திகைக்கின்றன!

கூடுகள் வெடித்து
உமிழ்நீர் இளைகளால்
இறங்கிவரும்
இளைய புழு வீரர்கள் !

வருடத்தின் வசந்தத்தை
ஒற்றை இரவிலே
புதிய புழுக்களுக்கு
தாரை வார்த்துவிட்டு
அரிபட்ட இலைகளின்
நரம்புகளுடன் மட்டும்
மொட்டையடிபட்டு
காட்சி தரும்
மல்லிகை செடிகள் !

கிராமத்து குளிரூட்டிகள்
எங்கள் வேப்பமரங்கள்
பழுத்த இலைகளை
வசந்தத்தின் வருகைக்காக
சொரியத் தொடங்கியிருக்கின்றன!

வெப்பத்தால் வெடித்து மலர்ந்த
நாவல் மரக்கன்னிகளின்
காலடியில்
சிறுதேநீக்கள்
மதுப்பிச்சை
கேட்டுக்கொண்டு
மொய்த்துத் திரிகின்றன !

ஓயாமல்
சுழலும் மின்விசிறிகள்
அதனால் வேகமாய் சுழலும்
மின் மானிகள்

பழைய பனையோலை
விசிறிகள்
புழுதி தட்டப்படும்
படித்த புத்தகமும்
புழுக்கம் விரட்ட வரும்!

நுங்குகளும்
இளநீர்களும்
குலைகளாக
கீழே இறங்கி
பிறவியின் பலனை
பிறருக்கு வழங்கும்!

மெத்தைகளை
தற்காலிகமாக துறந்து
விறாந்தைகள்
ஓய்வறைகளாக
பிரகடனம் செய்யப்படும்!

சீச்சீ .....
அப்பப்பா....
எப்பதான் முடியுமோ
என்ற ...
அலுத்த வார்த்தைகளுடன்
காற்றுத்தேடுவார்கள்
கருணையின்றி
மரங்களை வெட்டி
வெங்கார வீதிசெய்த
நாகரிக கனவான்கள்!

                                                       உமர் அலி முகம்மதிஸ்மாயில்

0 கருத்துக்கள்:

Post a Comment