நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Saturday, April 5, 2014

அநாகரீக காதல்















ஆசை மதுவை
அளவுமீறி
அருந்தியதால்
அவர்கள் எடுக்கும் வாந்தி
இது ஒருபோதும்
அழகாக இருக்காது
அருவருப்பாகவே இருக்கும் !
இதனால் ஆற்றங்கரை கூட
அமைதியை இழக்கும்
சுற்றி இருப்பவரின்
மதியையும் குழப்பும்!

ஆங்கில ஆசான்
கட்டணமின்றி படித்துத்தந்த
பிரத்தியேக பாடம்
திரைப்படங்கள்
நடாத்தும்
இலவசப்பள்ளிக்கூடம்!

காட்சியின் விளைவு இது
காட்சியாய்
விளைந்திருக்கு!

காதல் என்ற சொல்லுக்கு
நவீன அகராதி கொடுக்கும்
அநாகரீக விளக்கம்!


                                         உமர் அலி முகம்மதிஸ்மாயில்
2014 April 5th 
கவிதை வயலுக்கு எழுதியது 


0 கருத்துக்கள்:

Post a Comment