நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Wednesday, April 9, 2014

சிரி.....சிரி .....சிரி





சிரி.....சிரி .....சிரி








சிலர் சூரியனையே
கடித்துச் சுவைத்தது போல
சிரிப்பை சுட்டு
கரியாக்கி விட்டு
முகத்திலே
பூசிக்கொள்கின்றார்கள்!

கொடுக்காமல்
கிடைக்காததில் சிரிப்பும் ஒன்று
சிரிக்காமல் இருப்பவனில்
வருத்தம் உண்டு!

இழித்தும் சிரிக்கலாம்
பிறரை பழித்தும் சிரிக்கலாம்
ஒழிக்க முடியுமா
உன் உள்ளத்தின் சிரிப்பினை?

மலரின் உணர்வு மணம்
மனுதனின் உறவு சிரிப்பு!
மழலையின் சிரிப்பு
மனங்கவர் கரும்பு!

கமுகம்பூ விரிந்தால்போல்
அவள் சிரிப்பு
சில்லறை சிதறும் சத்தத்தில்
ஒரு சிரிப்பு!
எறும்பும் ஊர்ந்துவரும்
நல்ல சிரிப்பின் சுவை உண்ண

நீ சிரிக்கச் சிரிக்க
உனக்குள்
சந்தோஷ மொட்டுக்கள்
அடுக்கடுக்காய் விரியும்
உன்மீது
மகிழ்ச்சிப்பூகளை
அடிக்கடி சொரியும்!

நீ சிரிக்கச்சிரிக்க
உன் முகமும் மலரும்
விரிந்து மலர்ந்திட்ட
மல்லிகையாய்!!

உனக்குள் நீ
இரவல் வாங்ககூடிய
ஒரே ஒரு உணர்வு
சிரிப்புத்தான்!

திறக்க முடியாத
இதயக் கதவுகளை
புன்னகை இலகுவாக திறக்கும்
இறுகிய உள்ளப் பூட்டுக்களை
வெடி வைத்துத்தாக்கும்!

உன்னால் மற்றவருக்கு
வழங்கக்கூடிய
இலவச நன்கொடையும்
அதுவேதான்!

இன்று முதல் நீ
எண்ணிக்கணக்கிடு
எத்தனை தடவை
சிரிக்கிறாய் என்று

சிரி சிரி
பிறர் சிரிக்க
சிரியாதே
சிரிப்பதற்குச் சிரி!
வாழ்வில்
சிறப்பதற்குச் சிரி!

                                      உமர் அலி முகம்மதிஸ்மாயில்
                  2014 April 8th- அன்றைய கவிதா வயலில் விதைத்தது!

0 கருத்துக்கள்:

Post a Comment