நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Wednesday, April 2, 2014

கல்வி















ஏகலைவன் கூட
கற்றான்!
குருவை மனதிலே
ஏற்றான்!

ஏட்டிலே மட்டுமா
கல்வி
பாட்டிலும் உண்டே
நன்றாகச்சொல்லி!

கலைகள்
அறுபத்து நான்கல்ல
அத விட அதிகமென்றுனான்
சொல்வேன்!

கல்லாத கலைகள்
செல்லாத தலைகள்!

நவீன கால ஏகலைவர்
அதிகம்பேர்
அலைகிறார்கள் !
அம்மாவும் அப்பாவும்
துரோணராய்
துரோகத்து சிங்காதனத்தில்
வீற்றிருக்க !

கல்வி அவருக்கு
எட்டாக்கனி
சொல்லி அழை
கிட்ட அவர் நீ!

கடலை விற்கிறான்
விரலை மடித்து
கணக்கு பார்க்கிறான்
உடலை வருத்தி
வேலை செய்கிறான்

பள்ளி செல்ல முன்
பசியைப் போக்கணும்
துள்ளிச்செல்ல எண்ணம்
இல்லை குடும்ப நிலையே
அவனின் தொல்லை!

பொதுவின் உடமை
கல்வி ,கற்றல்
இது உன் கடமை!

கல்லாமல் கல்லள்ளி
மண்சுமந்து சபையிலே
ஓரமாய் ஒதுங்கி
நில்லாமல்

சொல்லாமல் சொன்னசெதி
என்னன்று நீ கற்பாய்
வில்லாமல் கற்றதெல்லாம்
நன்முறையாய் நீ காப்பாய்!

விலையற்ற செல்வமடா
வற்றாத ஊற்றதடா
அலைந்து திரிந்தெனினும்
கற்றுக்கொள் காலத்தில்!

பல்லு முளைத்த பிள்ளை
சொல்லு மழலையில்லை
காலம் கடந்த பின்னால்
கல்வி கற்றாலும் பலனில்லை!

ஊனுக்கு அடுத்ததாக
உயர்த்தி வை உன்கல்வி
முன்னுக்கு நீ வருவாய்
தானாக முன்னேறி!

உமர் அலி முகம்மதிஸ்மாயில்!

0 கருத்துக்கள்:

Post a Comment