நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Sunday, April 13, 2014

முத்தையா முரளிதரன் !















கண்ணை உருட்டி
கையைப் புரட்டி
எதிரியை பயமுறுத்தி
புயலிடம் வேகத்தை
கைமாற்றாய் வாங்கி!
காற்றைக்கிழிப்பான் விக்கட்
கோலைக் கெளிப்பான் !

சுண்டு விரல் வித்தைக்கார
முத்தையா
நீ இலங்கை அணி பெற்றெடுத்த
முத்தையா!

நண்டூருவது போல
உன் பந்தூரும்
குன்டூசிபோல
உன் கண் ஊரும்!

களத்தடுப்பில் புலி
எதிரிக்கு நீயென்றால் கிலி
சுழல் பந்து எடுக்கும்
விக்கெட்டினை பலி!

சுழலாத விரல்
சுழற்றிவிடும் பந்து சென்று
கழற்றிவிடும்
கடுகதியாய் களம் புகுந்து  !

பொல்லுக் கழண்டு விழும்
பொல்லாத பந்துக்காரன்
சொல்லித்திரியமாட்டான் வெள்ளைப்
பல்லுத்தெரிய சிரிப்பான் மைக்கறுப்பன்!

விளாசித்தள்ளுபவன்
வினாடியில் விழுவான்
உச்சிக்கு பந்தடித்து
உள்ளங்கைக்குள் தருவான்!

இக்கட்டு நிலையில்
விக்கெட்டு எடுப்பான்
வெற்றிக்கு நெருங்குகையில்
சிக்ஸர் எல்லாம் அடிப்பான்!

ரேக்கொர்டு வைச்சுப்புட்டு
வீட்டோடு போயிட்டான்!

சரியாத சரித்திரத்தை
சரியாக பதித்துவிட்டு
சரிந்திடாமல்
நிமிர்ந்தி நிற்கிறான்

துடுப்பாடத்தில்
சோதனை தரும்
சாதனை வீரனவன்!

                               உமர் அலி முகம்மதிஸ்மாயில்

இன்றைய கவிதை வயலில்  விதைத்தது 

0 கருத்துக்கள்:

Post a Comment