நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Saturday, April 12, 2014

மானிட வாழ்க்கை















தடுக்கி வீழ்ந்து
தரையில் தவழ்ந்து
எழும்பி இருந்து
பிடித்து நடந்து
அடித்து ஓடி
இடறி விழுந்து
மீண்டும் எழுந்து
குருதி துடைத்து

உள்ளங்கள் குடைந்து
செல்வங்கள் தேடி
உற்றாரை உதைத்து
உதவாதோர் அணைத்து

ஊர்விட்டுச்சென்று
போர்பல கண்டு
வேர்விட்டு வளர்ந்து
நீர் தேடியலைந்து!

காரிகை கண்டு
பேருவகை கொண்டு
பேரிருள் நாடி
இருவரும் ஓடி

சிரிப்பினை வாடகைக்கெடுத்து
செருப்புப்போல்  அப்பப்போ 
அணிந்து கொண்டு
நெருப்புக்கள் கடந்து
முட்களை மிதித்து

சண்டை செய்து
பின்னர் சமாதானமடைந்து
நஞ்சை உணவாயும்
உணவு நஞ்சையும் 
மாறி மாறி
உணர்வின்றி உட்கொண்டு !

பட்டுச்சட்டை படாடோப
வாழ்க்கை
போட்டாபோட்டி
போட்டுக்கிட்டு
ஓட்டப்பந்தயத்தில் ஓடுகிறான்
வெட்டாத குளியைத்தேடி

நீயாக விழுவாய் சிலவேளை
வீழ்ந்துவிடா விடினும்
கொண்டு சென்று புதைப்பார்கள்
உன் பேழை !

                                     உமர் அலி முகம்மதிஸ்மாயில்

                              இன்று கவிதை வயலுக்கு எழுதியது 

0 கருத்துக்கள்:

Post a Comment