நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Thursday, April 10, 2014

மறக்க முடியுமா?

காலையில் சூரியனாகவும் 
மாலையில் சந்திரனாகவும் 
மாறி மாறி உதிக்கின்றாய்!

தென்றலாக 
தடவிச் செல்கின்றது 
காற்று வடிவெடுத்த 
இனிய முகம்!

தேனமுதாக 
என்னை தீண்டுகின்றது 
உன் இசை முகம் 

வண்ணத்துப்பூச்சியின் 
வடிவத்தில் 
வட்டமடிக்கும் வண்ணமுகம்!

தேன் சிந்திச் சிரிக்கின்ற 
பூமுகமும் 
மறக்க முடியாமல் 
ஐம்புலனில் 
விழுந்து மனச்சட்டகத்தில் 
சிதையாத ஓவியமாய்!

                                           உமர் அலி முகம்மதிச்மாயில் 
                                                            April 10  2014 

0 கருத்துக்கள்:

Post a Comment