நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Monday, July 14, 2014

அற்புதம் செய் ஆண்டவனே!




அற்புதம் செய் ஆண்டவனே!
.....................................................

நரகவாசிகள்
சொர்க்கவாசிகளின் நகரங்களின்மீது
சரமாரியாக தாக்குகிறார்கள்

வளைகுடா முழுதும்
நோன்பு திறந்து
உண்ட மயக்கத்திலும்
உலகக் கிண்ண உதைபந்து கண்ட
கிறக்கத்திலும்
உறங்கிக்கிடக்கின்றது
அவர்களது நாய்கள் கூட
என்னமாக
குறட்டைவிடுகின்றன !

ஆனால்
அப்பாவிகள் அனைத்தையும் இழந்து
அவலக்கடலில் அரக்கப்பரக்க
அமிழ்ந்துகொண்டிருக்கிரார்கள் !

அறுசுவை இப்தார் இங்கே
ஒருசுவையுமின்றி
அனைவரும் அங்கே!

இடிபாடுகளுக்கிடையில்
சடலங்களையல்லவா
அகழ்ந்தெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்

உடன்பிறந்த
சகோதர்களை
சதைவேறு இரத்தம்வேறாக
யூதன் பிரித்துப் பந்தாடுகிறான்
அந்தச் சுவை அவனுக்கு
இன்னும் உயிர்களின் தாகத்தை
அதிகரித்ததுபோல
இடைவேளைகளில்
வெடிகணைகளை ஏவி விடுகிறான்!

அதை கண்டுகொள்ளாமல்
ஒட்டகப் போட்டிகளும்
கட்டிடங்களுக்கு அடிக்கல்களும்
பச்சைக்கொடியசைத்து
ஆரம்பித்து
அமைதியாகக் கிடக்கின்றார்கள்!

அச்சத்தால் பதுங்கி
ஆங்காங்கே
சிதறிப்போயிருக்கும் சஹீதுகளை
சியோனிச ஓநாய்கள்
தேடிப்பிடித்து
மார்பிலே கடித்து
ஈமானிய இதயத்தின்
இசுலாமிய குருதியை
சுவைக்கின்றன!

சுபகானல்லாஹ் என்ன உறுதி
இல்லங்கள் மட்டமாகியும்
அவர்கள் உள்ளங்கள்
இன்னும் ஏக இறைவனில்
திட்டமாகவே இருக்கின்றன!

ஏதோ சொல்லவந்த
விளையாட்டுக் குழந்தைகளின்
மழலை மொழிகள்
தொண்டையில் சிக்கியவண்ணம்
பிரசவிக்கப்படாமலேயே
சுகதாவாகி
சுவனத்துக்கு சென்றுவிடுகின்றன!

இடிந்த கட்டிடங்கள்
யூதர்களுக்கு நரகமாக தெரியலாம்
இறந்தவர் உடல்களும்
சடலமாக தெரியலாம்
ஆனால் எனெக்கென்னவோ
அது சுவர்க்கமாகவும்
அவர்களெல்லாம் அங்கே
புஸ்பமாகவுமே தெரிகிறார்கள்!

இருப்பினும்
இறைவா இது போதும்
அவமானப்பட்டு
அழிந்து
தோற்றுப்போய்
தலைகுனிந்து நிற்கும்
உண்மையை
மீண்டும் ஒருதடவை காப்பாற்று!

அற்புதம் செய்தவனே
மூசாவின்
ஆசாவின் அரசனே
அடியானை அரவனணையாயோ ?

அற்புதம் செய்வாய்
இங்கு அசகாய சூரரில்லை
இதை அப்படியே தடுப்பதுக்கு
அனாயாசமாய் தடுத்து விடு
அவர்பக்கம் மீண்டும்
அவற்றைத் திருப்பிவிடு!

யூதர்களது மூளைகளை
ஸ்தம்பிதமாக்கு
அவர்களது ஏவுதளங்கள்
தாமாக வெடிக்கச்செய்
கிடங்குகளுக்குள்ளேயே
தீப்பொறிகளை உருவாக்கு
ஏவியவை
வீழ்ந்து வெடியாமல் விடட்டும்
அவர்களது பார்வைகளினை
இருளாக்கு
பாலஸ்தீன முஸ்லீம்களது
வாழ்வினை ஒளியாக்கு !

மு.இ.உமர் அலி
2014 july 14th
 — with கவிஞர் நாகூர் காதர் ஒலி,Kalaimahel Hidaya RisviShafath Ahmed and 43 others.
LikeLike ·  · Stop Notifications · Share

0 கருத்துக்கள்:

Post a Comment