நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Tuesday, July 8, 2014

சுடுசோறும் பழங்கறியும்



சுடுசோறும் பழங்கறியும்

களிமண் சட்டியில
மிளகாய் அரைத்த கறி
முதல்நாள் சமைத்த கறி
அளவாய் தீய்ந்திருக்க

குறுணல் அரிசிச்சோறு
இடையில் குழைஞ்ச சோறு
இரண்டும் இணைந்தபோது
தருகின்ற சுகமே வேறு!

குளத்து விரால் மீன்கறி
ஏறு கெழுத்தி பழங்கறியும்
புளிப்போட்டு
குழம்பு வைத்த நெத்திலியும்
தரும் சுவையும் வேறுதானே!

கடைகள் பல போயும்
எங்கும் கிடைக்கலியே
சுவைகள் பல இருந்தும்
தீய்ச்சகறி போலிலையே!

சட்டி கழுவுமுன்னே
உள்ள போட்ட சுடுசோறு
ஒட்டி இருக்கும் கறி
மட்டுமன்றி
ஓரமெலாம் பிரட்டிவரும்
ஏழாம் சுவைக்கலவை
எங்கிருந்தோ கூட்டிவரும்!

கருகிய வாசத்துடன்
கவளமாய் திங்கிறப்போ
ஒருவித திருப்திவரும்
மனமும் தான் ஓடிப்போய்
உள்ளால நிறைந்துவிடும்!

கடைச்சோறு வாங்குவதால்
பளங்கறி கிடைப்பதில்லை
கடையரிசி வாங்குவதால்
இடிஞ்சரிசி கிடைப்பதில்லை!!

அரிக்கிமிலாய்
இருக்கிற குத்திப்பலகை ,
சுரட்டை அகப்பைக்கணை
இதுபோன்ற
அடுக்களை காட்சியெல்லாம்
சாப்பாடு மேசை வர
புளக்கடைக்குள் போனதடா!

பழங்கறிதான் கிடைப்பதில்லை
கறிக்கவிதையாவது
ருசித்திடலாம் வாருங்க எல்லோரும்
ரசித்திடலாம்!

அருஞ்சொல்லில் பதம் இருக்கு
புரிஞ்சிக்கிட்டு வாழ்ந்திடுங்க
அருங்காட்சி சாலையிலே
கறிச்சட்டி வைச்சிருக்கு
பாத்துக்கிட்டு தெரிஞ்சுக்கங்க !

மு.இ.உமர் அலி
8 july 2014
 — with நிந்தமணாளன் அஷ்ரப்,Lawrence VasuthevanAshraff Puthunagaran and 46 others.
LikeLike ·  · Stop Notifications · Share
  • Renugadevi Velusamy · 9 mutual friends
    வாயில் எச்சில் ஊற பாட்டியின் சமையல் நினைவுக்கு வருகிறது.
  • Valli Muthu ஏழாம் சுவையை எங்கிருந்தோ கூட்டி வரும்..
    செம அழகான வரிகள்...
  • Mohamed Ismail Umar Ali நன்றி Valli Muthu,ஏன் நீங்களும்தான் பாட்டிபோல சமைக்கலாம்தானே Renugadevi Velusamy
  • Uvais Nasly சுடு சொத்துக்கும் பழங்க கறிக்கும் ஏங்க வத்துட்டின்களே
  • Renugadevi Velusamy · 9 mutual friends
    ஏங்க மண்பானைல இதுவரைக்கும் சமைச்சதில்ல. இந்த வாரம் சமைக்க முயற்சி செய்யறேன். பாட்டி துணை.
  • Wajeezath Wahabdeen nomboda palaya ninaivuhal!
  • Uvais Nasly நானும் தான் தினமும் பழங்கறி சாப்பிடுறேன் ஆனால் அந்த மண் சட்டியில சமைத்தது போல் இல்லவே இல்லை
  • Lawrence Vasuthevan சட்டி கழுவுமுன்னே
    உள்ள போட்ட சுடுசோறு 
    ஒட்டி இருக்கும் கறி
    மட்டுமன்றி 
    ஓரமெலாம் பிரட்டிவரும்
    ஏழாம் சுவைக்கலவை 
    எங்கிருந்தோ கூட்டிவரும்!

    கருகிய வாசத்துடன் 
    கவளமாய் திங்கிறப்போ
    ஒருவித திருப்திவரும் 
    மனமும் தான் ஓடிப்போய் 
    உள்ளால நிறைந்துவிடும்!
  • Mohamed Ismail Umar Ali நீங்க சாப்பிடுவது குளிர்பதனப்பெட்டியிலே குளிர்காய்ந்த அந்நியக்கறி அது நமது உள்நாட்டுக்கறியல்ல Uvais Nasly
  • Amy Victor · Friends with Ssm Rafeek
    ஒன்றும் இல்லை
  • Uvais Nasly அரிக்கிமிலாய் 
    இருக்கிற குத்திப்பலகை ,
    சுரட்டை அகப்பைக்கணை 
    இதுபோன்ற 
    அடுக்களை காட்சியெல்லாம் 
    சாப்பாடு மேசை வர 
    புளக்கடைக்குள் போனதடா........................அருமையான் வரிகள் கலக்கிட்டிங்க
  • Mohamed Shameer நோன்புல ஏன் பாஸ் இப்பிடி. நாக்கு ஊருது
  • Uvais Nasly ஊற வச்சுட்டாரே இன்றைக்கி நான் சுடு சோத்துக்கும் பழங்க்கரிக்கும் எங்கே போவேன்
  • Shafath Ahmed ம்ஹும் கவிஞரே.. பெருமூச்சுவிட்டு என்ன செய்ய..
    இங்கே நாங்கள் நாளும் பொழுதுமாய் குறுனல் சோறு..இடிந்த அரிசிச் சோறு..தீஞ்ச கறி புரட்டிய சோறு..இப்படி நீங்கள் கனவு காணும் அனைத்துமே
    நெஞ்சுக்கு நிறைந்து..வயிறு நிறைந்து...கவிஞரே..பெருமூச்சுவிட்டு என்ன செய்ய...?
  • Uvais Nasly இன்றைக்கி உள்ள நிலைமையில் இப்படியான ஏக்கத்தை வீட்டில் சொன்னாலே வேடிக்கையாக பார்ப்பார்கள்
  • கவிஞர் பாசிரா நபில் இதில் உங்கள் புகை படத்தை மட்டும் சுட்டு கொள்கிறேன் 
    அதற்க்கு ஏற்றவாறு கவிதை தொட்டு வைக்க வருகிறேன்
  • Mohamed Ismail Umar Ali நன்றி கவிஞர்Shafath Ahmed அவர்களே தாங்களது கொடுப்பினைக்கு, கொடுத்துவைத்தவர்கள் நீங்கள்,நாங்களும் இன்னும் பத்துப்பதினைந்து நாளில் வீட்டாக்களை கஷ்டப்படுத்தி சாப்பிடத்தான் போறோம் இன்சா அல்லாஹ் !
  • Mohammad Uwais Asalam now yan boys dos know
  • Uvais Nasly நானும் விரைவில் ஊர் வருகிறேன் இதை காட்டியே கேட்டு எப்படியாவது சாப்பிட்டே ஆகணும்
  • மு.யாகூப் அலி தை பொங்கலுக்கு 
    விலையாகும்...மற்ற நாளில் கானாமல் போகும் .
    பாட்டன் பூட்டன் 
    சொத்து யிது
    பிரிட்டன் காரன் 
    போன பின்னும்..நம்ம
    ஆளுங்கள் (அ)நாகரிகம் 
    கெட்டதால்.....மறந்தே
    போனோம்!
  • Shafath Ahmed நிந்தவூருக்கு வருகைதரவிருக்கும் எங்கள் கவிஞரை மண்பானைச் சோறு..தீஞ்ச கறி இத்தியாதி படையல்களுடன் வரவேற்க காத்திருக்கிறோம்!
  • Nazeema Naze கனவாய் போன நாட்கள் ...
  • Mohamed Janofar ஸ்ஹா... நாக்கு ஊறிட்டு. பழங்கறிபோல் பதமான கவிதை. தொடரட்டும் இதே சுவை.
  • Mohamed Ismail Umar Ali பின்னூடத்துக்கு நன்றி Mohamed Janofar,Nazeema Nazeema Naze,மு.யாகூப் அலி ,Mohammad Uwais
  • Vanitha Solomon Devasigamony சுடுசோறும் பழங்கறியும் அருமை!
  • Mohamed Ismail Umar Aliபின்னூட்டத்துக்கு நன்றி Vanitha Solomon Devasigamony அவர்களே
  • Mushtaq Ahmed கவிதை அருமை
  • Mohamed Ismail நாட்டார் இலக்கியமும் ,நவீனமும் கலந்திருக்கு .....அற்புதம் !
  • Lawrence Vasuthevan தண்ணிச் சோறு
    ------------------------

    தண்ணிச் சோறே
    தண்ணிச் சோறே
    உனை
    எண்ணிச் சோர்வேன்
    இந்நாள் தனிலே!

    நீ
    எங்கு போனாய்
    என்ன ஆனாய்?

    காலை வயிற்றின்
    கலியாண வீடே!
    இடைத் தீனிகளுக்கு
    இடம் வைக்காமல்
    மதியம் வரைக்கும்
    உந்தன் பாடே...

    எத்தனை அவதாரம்
    எடுப்பாய் நீ...
    கொச்சிக்காய் வெங்காயம்
    பச்சையாய் அரிந்து
    பருகிட அமுதம் நீ...
    சீனியும் தேங்காயும்
    சிதறிய நிலவென
    வாழைப் பழமுமாய்
    வடிவாய் இருப்பாய்நீ...
    மஞ்சள் சேலை அணிவாய்
    மாம்பழ நாளில்...
    பினாட்டு ஊறவைத்து
    பிசைந்துன்னை எடுத்தால்
    பார்க்கநீ குளம்பாவாய்...
    கிண்ணம் பழத்தோடென்றால்
    கதையே வேறுதான்...!
    வழியற்ற நாட்களில்
    பச்சைத் தண்ணிக்கும்
    உப்புக்கும் கூடநீ
    உடன்பட்டு வருவாயே...

    எரிக்கும் கடுவெயிலை
    எதிர்த்து நின்றாடி
    மாலை வரை
    உழைப்பு உயிர்த்துவர
    உரம் செய்யும்
    எழிமையான வலிமைநீ!

    காலை உணவாயின்று
    கருவாடு கணக்காய்
    காய்ந்து சுருண்ட
    ஏதேதோ
    இழவுகளுக்கி்டையில்,
    கர்ப்பிணிப் பெண்ணாய்
    கனிந்த அழகே!
    உன்னை நினைக்கிறேன்!!!

    நீ
    எங்கு போனாய்
    என்ன ஆனாய்
    என் தண்ணிச் சோறே?!
  • Mohamed Niyas · 31 mutual friends
    Intha thalaimuraiyodu mudinthu viduma ivai ellam????
  • Rameeza Mohideen Yaseen உங்க கவிதை வாய் ஊறவைக்குது. நோன்புடன் எதை தொட்டுக்கொள்வதென புரியாமல் தட்டுத்தடுமாறுது மனசு.கொல்லைக்கு போனாலும் மீன்கறிக்குழம்பு மூக்கத்தொலைக்குதே.வாழ்த்த வார்த்தையில்ல. அற்புதம் உமர்
  • Yousuf MOhamed அருமையோ அருமை! பழசையெல்லாம் நினைவூட்டினீங்க! ஏக்கப் பெருமூச்சுதான் மிச்சம்.
  • Ahamed Abdul Kader Ahamed ஏன் ஏன் ஏனுங்க ஓமரு என் வயத்தெரிச்சலயும் என் வயத்துபசியையும் கெளப்புரிங்க 
    நோன்பு புடிக்கிறமாதிரி எழுதுங்க 
    தொறக்குரமாதிரி எழுதாதிங்க
    அருமை வயறு நேரஞ்சிபோச்சி
    8 July at 16:43 · Edited · Unlike · 2
  • Ashraff Khan சூப்பர்
  • Iniyavan Pattimandram எதற்கு சார் பழசை எல்லாம் நினைவு படுத்துகின்றீர்கள்
  • Mohamed Ismail Umar Ali வேறென்ன புதுப்பிக்கத்தான் Iniyavan Pattimandram
  • Iniyavan Pattimandram ஒரு தலைமுறைக்கே தெரியாமல் போய் விட்டதே
  • Mohamed Ansar super pa
  • Ibra Lebbai Sudu sorum pazangkari thindrakalam malaiyerip poachu. Aana ungakavi thinna thinna suvayo athiga mahchu rushe thanay yenna sholvean! Wazhtthukkal.
  • Meera Mahroof !!!”சட்டி கழுவுமுன்னே 
    உள்ள போட்ட சுடுசோறு 
    ஒட்டி இருக்கும் கறி
    மட்டுமன்றி 
    ஓரமெலாம் பிரட்டிவரும்
    ஏழாம் சுவைக்கலவை 
    எங்கிருந்தோ கூட்டிவரும்!“.

    சாப்பிட்ட மாதிரியே இருக்கு
    வாழ்த்துக்கள் உமர் அலி.
  • Bknagini Karuppasamy அருமையா இருக்கு.. மனதுடன் வயிறும் நிறைந்தது..
  • Kaleel Rahman Hahaha yevalavu rusi antha sappadil. Athellam yenke ipothu. Aamam nichayamaha
    Ilam santhathiku athu theriyathu. Alhana valkai alahana kavithai. Thanks a lot.
  • Meeraan Ibrahim Tholaaaa...,
    Ammila kojjikkaai
    Arajjy Aaakina
    Anthak kaalam_ippa
    Pakkattu kadail
    Idyjjee irukku
    Inthak kaalam

    Pala Virahu Erittu
    Saddyil Samayttar 
    Anthak kaalam_ ippa
    Ellaa idamum 
    Samayel Oru rusee
    Inthak kaalam

    Kaalay unavu
    Panapalam punaadu
    Anthak kaalam _ippa
    Kaanja Roddiyum
    Naarina kary...
    Inthak kaalam

    Pulloondy mtheeyor
    Nadappatha
    Kaana mudiyaathu

    Ery porul Samayall
    Noikalay koddutu
    Ilamay kuranjee 
    Impam mudiyuth
    Padikkira pillada
    Thala mudy Naraykkutu

    Palasa Ninajjaa
    Aaasay yaaaha
    Varukutu
    1000 Nanrikal thakkalku
  • Shakir Mustapha Great.... excellant ....
  • ஜெயராமன் பிச்சுமணி நண்பரே! படிச்சதுமே பசிக்க ஆரம்பிச்சிடுச்சு! அதனால உடனே log out பண்ணிடப் போறேன்!
  • Kalam Shaick Abdul Kader நாக்கில் ஊறியது உமிழ்; வாக்கில் தேறியது நற்றமிழ்! நோன்பு துறந்த பின்னரே படித்தேன்; சுவைத்தேன்; அப்பமும் நேற்று வைத்த மீன் ஆனமும் கூட்டும் சுவைக்கு ஈடுமுண்டோ? ஏங்குகின்றோம் அந்தக் கிராமத்து மண்சட்டி வாசனைச் சாப்பாட்டை எண்ணி, எண்ணி!
  • Cannayane Tamijeselvane · Friends withகவிஞா் கி. பாரதிதாசன். பிரான்சு
    அப்படியே சாப்பிடலாம்
  • Thaiyeeb Vellaiyan அரிக்கிமிலாய் 
    இருக்கிற குத்திப்பலகை ,
    சுரட்டை அகப்பைக்கணை 
    இதுபோன்ற 
    அடுக்களை காட்சியெல்லாம் 
    சாப்பாடு மேசை வர 
    புளக்கடைக்குள் போனதடா!
  • Govind Dhanda என்ன உமர் அலி மீனைப்பற்றிச் சொல்லி ஊறுற எச்சிலில் நாக்கு மீன் போல நீந்துது, அன்றைய நாளின் ஞபகங்கள் நினைவில் நீந்துது!
  • றாபியின் கிறுக்கல்கள். நண்பா
    நோன்பு திறந்த பிறகே படித்தேன்
    உன் கவிதையை.
    பசி கெளம்பிடும் என்ற பயத்தால்...
    வாழ்த்துக்கள் நண்பா...
  • Ratha Mariyaratnam ஏன் சகோதரா உங்களுக்கு இந்த வேலை.....நாவூற வைக்கிறீகள்.........இதுவெல்லாம் எனது 10 வயதோடு சரி....எனது அப்பம்மா இறந்தபின் இல்லாது போய் விட்டது......சகோதரா உங்கள் கவிதை கருத்துக்கள் எங்கிருந்து எடுக்கிறீர்கள்.... யாருக்கும் வராத சிந்தனை.....வாழ்த்துக்கள் சகோதரா
  • Ratha Mariyaratnam இப்படிக் கவிதை எழுத எம்மால் முடியாது .....சாப்பிடமட்டும் தான் முடியும்
  • Thaha Maraikayar Nagore · 15 mutual friends
    மன்சட்டி சமையலிலே மணமான மீன்குழம்பு எட்டிசென்று போனாலும் இழுக்கும் அந்த கார வாடை அந்தகால முன்னோர்கள் ஆக்கிஉண்ட மண் பாண்டம் ஆரோக்கியம் பழைய மீன்குழம்பை பக்குவமாய் சூடு பண்ணி ஆட்டுகல்லில் அரைத்த ஆப்பம் தோசைக்கும் அப்படியே அள்ளி திண்ட நாக்கு ருசி கருவாடு கத்திரிக்காய் கடல் ராலு பச்சை மாங்கா மொச்சகொட்டை பக்குவாமாய் குழம்பு வைத்தால் மண்சட்டி மணக்கும் மனமெல்லாம் கணக்கும் காலம் மாறிடுச்சு கண்ட உலோகம் பாதிரமாச்சு பழயருசி மாறிடுச்சு பலவித நோய களும் வந்துடுச்சு மண்சட்டியை இனி மாட்டிவைத்த படத்தில்தான் பார்க்கவேணும்
    9 July at 00:35 · Edited · Unlike · 2
  • Ahamed Zacky · 16 mutual friends
    ஏன்பா இந்த நோன்பு வாயில நாவூற வக்கிறீங்க, அடுக்குமா!
  • மா.சித்ரா தேவி ஆஹா,ருசியோ,ருசி
  • Mohamed Ahamed Lebbe · 9 mutual friends
    இப்பவுள்ள தலைமுறைக்கு இந்த சுவையெல்லாம் புரியவா போகிறது! நாட்டுக்கோழி கூட விருப்பமில்லை broiler கோழியும் fast food உணவுகளும் chemical மரக்கறிகளும் carbite அடித்த பழ வகையும் ஐஸ் போட்ட மீனும் தானே இப்போ நகர் புறங்களில் கிடைக்கிறது.
  • Ashraff Puthunagaran பழங்கறிதான் கிடைப்பதில்லை 
    கறிக்கவிதையாவது
    ருசித்திடலாம் வாருங்க எல்லோரும் 

    ரசித்திடலாம்! ருசியான கவிதை.........................!
  • Abdul Kaiyoom Super boss
  • Raj Harran Antha naal gnapaham vanthathe..!

0 கருத்துக்கள்:

Post a Comment