நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Saturday, July 5, 2014

கிராமத்து ஒப்பாரி



கிராமத்து ஒப்பாரி
.............
அழுகையை அழகாக
இசயைமத்து அவர்கள்
அவதியில் பாடும் பாட்டு 

அதுக்கு இருக்கிறது
வெவ்வேறு மெட்டு
கல்லும் கரையும்
அதைக்கேட்டு

திட்டலிருக்கும் அங்கு
திமிறலிருக்கும்
நெட்டை இருக்கும்
உள்ளக் குமுறலிருக்கும்

கண்கெட வேண்டிடுவார்
இடிவிழவும் கூறிடுவார்
கூண்டோட குடியழிய
கொடுஞ்சாபம் கொடுத்திடுவார்
அழுத குரலோடு !

இல்லற்று இறப்பற்று
மண்டற்று மனையற்று
மங்கிடவும் இறைவனைக்
கேட்டழுவார்

இழுவையும் இருக்கும்
இடைக்கிடை
தொழுகையோடு கூடிய
குலுக்கமும் இருக்கும்

மாரிலடிப்பார் கதறி
பாரடி என் நிலையென்று விழிப்பார்
பேரிடி வீழ்ந்ததே இனி என்
நிலை என்னடி என்று துடிப்பார்!

மண்ணள்ளி வீசி
மண்போல போயிடுவாய்
போற நீ வரமாட்டாய்
பொணமாத்தான் நீ வருவாய்
மண்ணிலடிப்பாள்
இது சத்தியம் என்பாள்!

வீட்டு நிலையிலே முட்டுவாள்
கட்டாந் தரையிலே புரளுவாள்
தலைவிரி கோலமாக அழுகுமவள்
விரைவிலே ஓயமாட்டாள்
யார் தடுத்தாலும் கேட்கமாட்டாள் !

குடித்துவிட்டு தினம்
அடிக்கின்ற கணவனை
திருப்பி அடிக்க முடியாமல்
அழுகையாலே அவளடித்தால்
அது ஒப்பாரி

படிக்காம திரிகின்ற
விடல மகன்
படிக்கவில்லை என்றதால
வெடிக்கின்ற நெஞ்சோடு
படிக்கட்டில் இருந்தழுதால்
அது ஒப்பாரி !

பொது வேலிச் சண்டையிலே
அநியாயம் நடந்ததெண்டு
கதை சொல்லி அவ அழுதால்
அது ஒப்பாரி !

புதுச்சட்டை வேணும் எண்டு
புரியாத பிள்ளையொண்று
பெருநாளில் அடம் பிடிக்க
அது வாங்க முடியாம
மனமுடைந்து அவளழுதால்
அது ஒப்பாரி!

கைவிட்டு போனவனை
காலமெலாம் காத்திருந்து
மை இருட்டில் அவளிருந்து
கால் நீட்டிப்போடுக்கொண்டு
அவளழுதால் அது ஒப்பாரி !

குடும்பத்து ஆக்களோட
கூட்டாக கட்டிக்கொண்டு
கதைசொல்லி அழுவார்கள்
அதை பார்க்க நமக்கும்
தன்னாலே அழுகை வரும்
கண்ணாலே தண்ணி வரும்
அது ஒப்பாரி

கடலுக்கு போனவனை
கடல் கொண்டு போனதென்று
கடன் தொல்லை தீரும்வரை
போகுமிடம் எல்லாம்
சொல்லி அழுவாள்
அது ஒப்பாரி

கரையேற முடியாமல்
குடிலுக்குள் இருக்கின்ற
குமருப் பிள்ளைகளை
கரை சேர்ப்பாய் ஆண்டவனே
கரம் ஏந்தி வரம் கேட்டு
அவளழுவால்
அது ஒப்பாரி

வயலுக்கு போனவனை
வரம்பிலே பாம்பு கொத்த,
சிரிச்சிக்கிட்டு போன மச்சான்
உசிரில்லா உடம்பாக
சிலிர்த்துப்போய் வந்தபோது
பித்துப் பிடித்தவளாய்
பிதற்றி அழுவாளே
அது ஒப்பாரி !

அப்பாவி அவள் கணவன்
செய்யாத குற்றத்தில்
சிறைவாசம் செல்கின்றான்
சட்டத்தை நொந்தவளோ
திட்டி அழுகின்றாள்
அது ஒப்பாரி!

சொந்தங்கள் சூடு சுட
பந்தங்கள் தூரம் செல
தங்காமல் அவள் புலம்பியழுகின்றால்
அது ஒப்பாரி!

பருவ வயது மகள்
பாதையாலே போனவனை
காதலித்த கதை கண்டு
மானம் போகுதென்று
மனம் பதறி அவளழுதால்
அது ஒப்பாரி !

மழை விட்ட பின்னே தூவானம்
ஏழை அழுத பின்னே புஸ்வாணம்
அழுது முடித்தால்தான்
ஆத்திரம் அவதியாகும்
மனதில் கனங்குறையும்

ஒப்பாரி முடிந்த பின்னால்
விக்கி விக்கி அவள் அழுவாள்
இடை வெளி விட்டு
அவள் மனம் தளர்வாள்!

ஏழையாகப் படைத்ததுக்கு
இறைவனுக்கு கண்கெடுமாம்
எவ்வளவு தைரியம்
ஒப்பாரியின் துணைகொண்டு
எங்கெலாம் போறாங்க
அந்தக் கத நீங்க நின்று கேளுங்க!

மு.இ.உமர் அலி
2014 june 3

கிழக்குமாகாண முஸ்லீம் கிராமங்களில்காலாகாலமாக ஒப்பாரி ஒரு சுய உளநல ஆரோக்ய செயற்பாடாக இருந்து வந்துள்ளது.அவர்களுக்கு தாள முடியாத துக்கம் வரும்போது இவர்கள் இவ்வாறு ஒப்பாரி வைத்து அலுத்து தமது மனக்கவலையை ஆற்றிக்கொள்வார்கள்.சிரிப்பைப்போன்று அழுகை நமக்கு இறைவன் கொடுத்த ஒரு பெரும்கொடை
 — with Rameeza Mohideen YaseenLagan ScMuhammadh Ameer Anzil and 44 others.
LikeLike ·  · Stop Notifications · Share
  • பிரகாசக்கவி கவிதைகள் Oppari vaiththu ala maradiththu ala islaththil anunathi illai///
  • மு.யாகூப் அலி manakkumural kettu
    naranam kooda odivitum

    nallaave oppaari vaiththulleerkal.
  • Mohamed Ismail Umar Ali கருத்துக்கு நன்றி சகோதரா @ பிரகாசக்கவி கவிதைகள்,------------நாம் எல்லோரும் இன்று இஸ்லாத்தில் இருப்பதை மட்டுமா செய்கிறோம் இல்லையே அதுபோலதான் இதுவும்.
  • Mohamed Ismail Umar Ali நான் கிராமத்து இலக்கியத்தை ஆவணப்படுத்த முனையும் ஒரு ஆர்வலன் அவ்வளவுதான் வேறு எண்ணம் இல்லை @ பிரகாசக்கவி கவிதைகள்
  • Shakir Mustapha கிராமத்து இலக்கியத்தில் தமிழ் பேசும் சகோதரர்களும் இருக்கிறார்கள் தானே...! அவர்களை மையப்படுத்தி எழுதியதாய் வைத்துக் கொள்வோமே.....!!
  • Mohamed Fayas · Friends with Mathy Anpanand 3 others
    nice lines thoughts of village peoples...really super....
    3 July at 12:19 · Edited · Unlike · 1
  • Kaleel Rahman Oppari waithu ala nichayamaha islathil anumathi illai. Aanaal naam 
    Thamil makkaludan vaalnthathal avarhaludaya kalachara valihalil onraana oppari nammavarhalilum kaanappaddathu. Nittka. Namathu pandaya kalacharankalaana pollady
  • Kaleel Rahman Ithu ponra kalaacharankal ippothu mankippoikkondrukk innrathu ivaihalai uerppithu yemathu ilam santhathiyinarukku arimuhappadutha vendum.
  • Kaleel Rahman Nanry mohamed Ismail
  • Logesh Velu Arumai
  • Ratha Mariyaratnam நெடு நாள் ம் மறந்திருந்தோம் ஒப்பாரி ஒலியை ...கண்முன்னே கொணர்ந்தது மட்டுமல்ல ....அதன் விளக்கம் ,,,என் எதற்கு என்றெல்லாம் காரணம் கூறிவிட்டீர்கள் ......ஒப்பாரி சிலசமயம் கண்கலங்க வைக்கும் ....அண்மையில் நான் அழுத ஞாபகம் ,,,,என் கண்களை கலங்க வைக்கிறது ...வாழ்த்துக்கள் சகோதரா
  • Rameeza Mohideen Yaseen மழைவிட்ட பின்னே தூவானம்
    ஏழை அழுத பின்னே புஸ்வாணம்
    அழுது முடித்தால்தான்
    ஆத்திரம் அவதியாகும்
    மனதின் கனங்குறையும்.
    யதார்த்தமான கவிதா.அதுவும் ஒப்பாரி.வாழ்த்துக்கள்.படித்தவர்களே பேச்சளவில் இஸ்லாம்.பாமரர்களிடம் எங்கு தேடுவது.நாம் முதலில் நிமிர்ந்து நிற்போம்.மற்றவர் கூனல் என கூறமுதல்.தவறு இருப்பின் மன்னிக்கவும்
  • Ibra Lebbai Yintha oppari satharana ondralla navarasanaykalum konda kiramiya kalai yendral megaiyagathu! Arumay thozarea!
  • Ananthakrishnan Panchanadam · 2 mutual friends
    ஒப்பாரி

    இறந்த பிணங்களுக்கு

    இறக்கப்போகும் பிணங்கள்

    இசைக்கும் பாட்டு
  • கனா காண்பவன் கனா · Friends withGovind Dhanda
    ஏழையாகப் படைத்ததுக்கு 
    இறைவனுக்கு கண்கெடுமாம்
    எவ்வளவு தைரியம் ......"""" அருமையிலும் அருமை ..
  • Govind Dhanda மவராசன்னு நினைச்சுத்தான்
    மாமனாரானார் அப்பாரு
    படுபாவி பயலால‌
    படுக்கையில விழுந்து செத்தாரே.........

    மூக்கு சீந்தும் நேரத்துல 
    முந்தானியைத் தேடயில‌
    குந்தானியை பழிவாங்க‌
    கூசாம சீந்துவாரே
    அடுத்தவர் சீலையிலே.........

    இப்படிதான் இருக்கும் இல்லையா நண்பரே!
    ஒப்பாரி அடுத்தவரை வசை பாடும்போது வேடிக்கையாக இருந்தாலும்
    இழந்தவரை எண்ணி பாடுகையிலே நெஞ்சு விம்மி கண்ணீர் பெருகும் சம்பவங்கள்

    தாங்கள் சொன்ன உளவியல் கருத்து சாலப் பொருந்தும்!
  • Mohamed Janofar நல்ல ஒப்பாரி வாழ்த்துக்கள்
  • Athambawa Waakir Hussain நாசமற்று போயிருவாய் .......நல்லா எழுதுற ...அப்படியே ஊரில இருக்கிற பீலிங்க்ஸ்
  • Ashraff Puthunagaran கிராமத்து மண்வாசனை வீசுகின்ற ஒப்பாரி வெகு ஜோர்.........................
  • றாபியின் கிறுக்கல்கள். இந்த மண் போல பெயித்திருவாய்.
    கண் போன்ற கவிதையிது,
  • Mohamed Ismail Umar Ali ஒப்பாரி கவிதையை படித்து கருத்திட்டு என்னை ஊகுவித்துக்கொண்டிருக்கும் நண்பர்கள்,வாசித்தவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்,
  • Mohamed Sarook Abdul Azees கரையேற முடியாமல்
    குடிலுக்குள் இருக்கின்ற 
    குமருப் பிள்ளைகளை 

    கரை சேர்ப்பாய் ஆண்டவனே 
    கரம் ஏந்தி வரம் கேட்டு 
    அவளழுவால்............................. ................இன்ஷா அல்லாஹ் (எங்கே நமது துடிப்பான வாலிபர்கள் இனி ஒரு நாளும் இப்படியான ஒப்பாரியை நாம் கேடக்கவே கூடாது).
  • Aboobucker Ansar ஒரு தாய் தன் மகனை ஒப்பாரியில் திட்டும் போது " விசாதியத்துப்போவான்", "நாசமத்துப்போவான்" போன்ற வார்த்தைகளை பாவிப்பதை கேட்டிருக்கிறேன்.
    கோபத்தில் கூட தன்பிள்ளை நோய் நொடியில்லாமலும் எவ்வித துன்ப துயரமில்லாமலும் வாழ வாழ்த்துவதுதான் தாயுள்ளம்.

0 கருத்துக்கள்:

Post a Comment