நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Thursday, July 10, 2014

செய்தூன்களும் சைத்தான்களும்!


செய்தூன்களும் சைத்தான்களும்!

இந்த நாட்களில்
பாலஸ்தீனத்துப் பள்ளத்தாக்குகள்
செய்த்தூன் மரங்களை விட
செய்த்தானியர்களால்தான்
நிரம்பி வழிகிறது!

குன்றுகளில்
குண்டு மழை பொழிய
குருதியாறு
பெருக்கெடுக்கிறது
முனகலும் ஓலங்களும்
மலிந்து
அருவருக்கும்
அவல அருவிகளாக
உருவெடுக்க
அமைதி எங்கோ
மலை இடுக்குகளுக்குள்
ஒளிந்து கொள்கிறது
மீண்டும்
ஒருநாள்
மறுபிறவி எடுப்பதற்காக !

சுதந்திரம் மறுதலிக்கப்பட்ட
அவர்களது குருதிமட்டும்
விடுவிக்கப்படாத மண்ணை சுதந்திரமாக
தளுவிக்கொண்டே
மரணிக்கின்றது
அவ்வளவு இரக்கம் அந்த மண்ணுடன்.,

வலிகளே
போர்வைகளாகி
முழு தேசத்தையும்
கொடூர குளிரென்றும் பாராது
குத்திக் கொன்றுகொண்டிருக்கிறது!

யூதக்கழுகுகள் அடிக்கடி
அலகுதீட்டுவதற்காக
அந்த அப்பாவிகளை
வட்டமிட்டு கொத்திப்பார்க்கின்றன
அரபுக்கழுதைகள்
அதை சுற்றி நின்று
சத்தமின்றி புதினம் பார்க்கின்றன!

பரிந்துரை செய்யப்பாடாத
தேசியக்கொடியை மட்டும்
காற்றில் அசைக்கும் இவர்களது
தேசம் இன்னும் கனவிலேதான்
மிதக்கிறது!
அணிந்துரை எழுதப்பட்ட மக்கள்
மாறுசாதியினரால்
மறுக்கப்பட்டுக்கொண்டேயிருக்கின்றனர்!

நரம்புகள்
தளரச் செய்யப்பட்ட வீரர்கள்
கொதிக்கின்ற குளம்புகளை
அடக்கிக்கொண்டு
கொட்டிவிட முடியாமல்
தவிக்கிறார்கள் !

அமைதியாக
குமுறிக்கொண்டிருக்கும்
எரிமலை
எதிரிகள் தேசத்தில்
அதிர்ந்து வெடிக்கும் நாள்
வெகுதூரமில்லை
அடக்குபவர்கள்
சிதைக்கப்படப்போவதிலும்
ஐயமில்லை
அன்று புனித தலம்
நம்மிடம் வீழும்
அபகரித்த மண்ணும்
நமக்கு மீழும்! ,

வாழ்க சுதந்திர பாலஸ்தீனம்
ஒழிக்க இஸ்ரேலிய அட்டூழியம் !

மு.இ.உமர் அலி
10 july 2014
 — with Nazeema NazeMohamed MursithA L Jaffeer Jaffeer and 29 others.
LikeLike ·  · Stop Notifications · Share
  • Farsan S Muhammad பாலஸ்தீனம் நம் இதயம்
  • Rameeza Mohideen Yaseen அருமையான வரிகள்
    புதைந்த வீரத்தை
    தட்டியெழுப்பி
    வீரப்போர்வை அணிந்து
    போராடி வெற்றி பெறுவோம்!
    உதிரம் கொடுக்க
    முடியவில்லை
    பிராத்திப்போம்
    ஒன்றுபடுவோம்.
    வெற்றிக்கனியை சுவைப்போம்
    எதிரியின் கோட்டையில்
    வைத்தே இன்ஷா அல்லாஹ்
  • Moh Jahaabarali ஆம்...
    யூதகழுகுகள் தன் அலகு
    களை கூர்தீட்டத்தான்..
    அடிக்கடி வந்து எதிர்பின்றி சடலமாய் வாழும் பாலஸ்தீனமக்களை குத்தி கிழித்து விட்டு...?
    போகிறது...
  • Kaleel Rahman Masaallah pasathayum parithapathayum pinaitha kavithai nanrihal.
  • Ibra Lebbai Vettikidaikkum wetkai adankum antha nal varumvarai aathankam olikkum....
  • Musthafa Bashier · Friends with Mansoor A Cader
    Ameen
  • Meera Mahroof “யூதக்கழுகுகள் அடிக்கடி 
    அலகுதீட்டுவதற்காக 
    அந்த அப்பாவிகளை 

    வட்டமிட்டு கொத்திப்பார்க்கின்றன 
    அரபுக்கழுதைகள் 
    அதை சுற்றி நின்று 
    சத்தமின்றி புதினம் பார்க்கின்றன!“

    உண்மை உமர் அலி.
  • Kalia Nthna · 3 mutual friends
    நமக்கும் ஒருமுறை ஒரு நாள் விடிவு வரும்

0 கருத்துக்கள்:

Post a Comment