நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Wednesday, July 9, 2014

பலசேனா

ஊடகங்களின் கஜானாக்கள்
பல சேனாவினால்
நிரப்பப்பட
அவர்களது பேனாக்கள்
கருத்துக்களுக்கு
கருத்தடைசெய்துவிட்டன!

காவியுடுத்திய
அந்த சாக்கடையின்
பேச்சிலே ஓயாது வீசுகின்றது
துவேசத்தின் துர்நாற்றம் !

தினமும் அவன் புதுசு புதுசாக
வாந்தி எடுக்கிறான்
அவனது தோழர்கள்
அதனை அவர்களது முகங்களால்
ஏந்திக் கொள்கின்றார்கள்.
சிலவேளை நக்கி ருசிதட்டி
சப்புக்கொட்டுகின்றார்கள் !

ஒத்து ஊதுகிறார்களே ஒழிய
எதிர்த்து எழுத எவனும் எழவில்லை
பார்க்க அருவருக்கிறது
பத்திரிகை தர்மத்தை !

ஊடகங்கள் இறந்து போக
அவை
குடும்பத்தோடு
குத்தகைக்கு
விடப்பட்டதாகவே
கருதுகின்றேன்!

மு.இ. உமர் அலி
2014july 9

0 கருத்துக்கள்:

Post a Comment