நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Sunday, July 13, 2014

மாமியும் மருகியும்!



மாமியும் மருகியும்!

அழகிலே
பெண்ணுக்குப் பெண்ணே
பேராசை கொள்வதை அன்று 
பண்ணாகச் சொன்னான் அந்தக்கவி!
ஆட்சியிலே
பேராசை கொண்டு
சில குடும்பம் அழிவதை இன்று
குறுக்கிச் சொல்லுது இந்தக்கவி !

மாமியும் பெண்தான்
மருகியும் பெண்தான்
இன்றைய மாமி நேற்றைய மருகி
இன்றைய மருகி நாளைய மாமி
எல்லாமே சக்கரம் !
இதிலில்லை மந்திரம்!

பூனையப்போல வந்தாள்
இப்போ புலி மாதிரி மாறினாள்
இது மாமியார் கூற்று

புன்னகை செய்தாள் பொட்டும்
வைத்தாள் பூவாக என்னை
போற்றிக்காத்தாள்
என்னவோ தெரியல
இப்போ எரிந்து விளுவிறாள்
எடுத்ததெற்கெல்லாம்
என்மேல் பாய்கிறாள்
மருமகள் கூற்று!

ஒவ்வொருவர் உச்சியிலும்
ஆளுக்காள் மாறி மாறி
கொச்சிக்காய் அரைக்கிறார்கள்!

எச்சித்தண்ணி ஊற்றுவதிலும்
பச்சத்தண்ணி குடிப்பதிலும்
உப்புச்சப்பில்லாமல் சண்டை !

சீரியல் பார்ப்பதிலும்
சீவி முடிப்பதிலும்
சின்னச்சின்னைச் சண்டை !

வெற்றிலை படிக்கமும்
சோற்றிலே உப்பிலை என்பதும்
அடிக்கடி சண்டையின்
மிடுக்கான காரணங்கள்!

சோடனை கூடவாம்
மருமகளை மாமி எப்பவும்
குறைதான் சொல்லுறா!

சாடைதான் பேசுவா,எப்பவும்
சந்திலே முகவாயை முட்டுவா
மருமகள் சொல்லுறா!

போரியல் சரித்திரங்கள்
இது போல சம்பவங்கல்
வராற்றுப்பின்னணியில்
எக்கச்சக்கம்
அதனால் வந்ததே
உச்சக்கட்டம்!

மருமகளைக் குறைகூறும் மாமியாரும்
மாமியைக்குறைகூறும் மருமகளும்
கொண்டைகளைப் பிடித்திழுத்து
சண்டையும் பிடிப்பார்கள் சிலவேளை !

கொதிக்கின்ற வார்த்தைகளை
வாயாலே கொட்டி விட்டு
எரிக்கின்ற பார்வையினால்
எஞ்சியதை அழிப்பார்கள்!

மற்றவர் பார்க்கையிலே
நடிக்கின்ற சோடி இது
உற்றவர் உணரும்வரை
நடக்கின்ற யுத்தமிது!

இழந்ததை பெற்றிட
அம்மாவின் ஆட்டம்
பெற்றதை நிலை நாட்டிட
மனைவியின் தேட்டம் !

சிந்திய மூக்கோடு குந்தி
மகனிடம் செய்யாத வேலையை
செய்ததாய்ச் சொல்லுறால் அன்னை !

மனைவியோ சிவந்த முகத்தோடு அழுது
அகந்தை பிடித்தவள் உன்தாய்
அறைந்தாளே என்னை கையால்
முகத்தைக்காட்டுவாள் திரும்பி !

தாயா தாரமா
தர்மத்தின் யுத்தம் தனயனுக்குள்ளே
ஓயாத சத்தம் உள்ளத்தினுள்ளே

நித்திரை போச்சு
நிம்மதி போச்சு
செத்திடலாம் என்று
அவன் மனம் எண்ணவுமாச்சு!

மு.இ.உமர் அலி
13 July 2014
 — with Ashraff KhanJalaldeen Mahakavi,Mm.mohamed Kamil and 43 others.
LikeLike ·  · Stop Notifications · Share
  • Arshiya Arshi · 2 mutual friends
    Unmai dhan...
    Maamiyaar enakku thai endru puriya vaipadharko ennavo?
    Kadavul en thaiyai ennidamirundhu pirithu vittan....
  • Kaleel Rahman Real kavithai
  • Ajmal T Sahibu Unmaiyai soannir
  • Nazeema Naze எல்லா மாமி மருமகளும் இப்படி இல்லை...
  • Nazeema Naze irunthaalu,,,,////மற்றவர் பார்க்கையிலே
    நடிக்கின்ற சோடி இது 
    உற்றவர் உணரும்வரை 
    நடக்கின்ற யுத்தமிது!// intha varigal arumai...
  • Dawood Ahamed .உமர் அலி...TV சனல்களின் தொடர்ச்சியாக ஒளிபரப்பப்படும் சீரியல்களை வரிசையாக ரசித்ததின் தாக்கமோ...
  • Mohamed Ismail Umar Ali இருக்கலாம் ,முன்னரை விட இப்போதெல்லாம் அதிகமாக இருப்பதாக அறியப்படுகின்றது,அநேகமான தொடர்கள் மாமியாவையும்,மருமகளையும் கீரியும் பாம்புமாகவே சித்தரிக்கின்றன.அதைத்தானே இவர்களும் தொடர்ந்தும் பார்க்கின்றார்கள்.DawoodDawood Ahamed
  • வளர்மதி சிவா பல வீட்டு சங்கதிகளை பிட்டு பிட்டு வைத்திட்டீங்க,அன்புப் போராட்டம்தான்.இதில் நானும் உள்ளடக்கம் என்பதை தன்னடக்கத்துடன் கூறிக் கொள்கிறேன்,அந்த ஆண்மகன் தான் ஐயோ பாவம்.மத்தளம் போல் இரண்டு பக்கமும் இடி வாங்குவார்.
  • Mohamed Ismail நாட்டுப் புறச் சாயல் நயங்கள் கொண்ட கவி ஏட்டைபுரட்டாத பாமரனும் விளங்கும் கவி வீட்டு குழப்பத்தை விளக்கும் இந்தக் கவி ஓட்டை மனங்களை ஒன்றாக்கும் சந்தக்கவி !
  • Rameeza Mohideen Yaseen காலத்தின் கோலத்தை கருவாக்கி சீரியல்கள் சம்பாதிக்கிறது.விட்டுக்கொடுக்கா உரிமை போராட்டம்.காலாகாலம் நடக்கும் வெறியாட்டம்
    பாவம் ஆண்களிற்கோ 
    திண்டாட்டம்!

    தாயையும் தாரத்தையும் சமாளித்தால் அவனே வெற்றி வீரன். அனுபவமுண்டோ!
    கவிதா அழகாக உள்ளது.வாழ்த்துக்கள் கவிஞரே
  • Shanker Kula NICE BRO!
  • Shafath Ahmed நாட்டிலே..வீட்டிலே..ஏன் காலடியிலேகூட நடக்குது..என்று தணியும் இந்த அவலம்.நாளைய மாமியும்,இன்றைய மருமகளும்..இன்றைய மாமியும்,நாளைய மருமகளும்..தலை சுற்றுகிறது உமர் அலி.
  • Ibra Lebbai Unmaythanay appadiyea alli sorinthulleerkal. Kanmunne yindrum kandean.
  • Ratha Mariyaratnam mika arumai ,,,sakothara...valakkam pola
  • Govind Dhanda Ovvoru Aanukkum muthaaypaay sonnavari porunthum!
  • Vanitha Solomon Devasigamony இன்றைய மருகி நாளைய மாமி
    எல்லாமே சக்கரம் !
    இதிலில்லை மந்திரம்!அருமை. வாளெடுத்து போர் தொடுக்கும் காட்சி யும் அருமையே!!
  • Mohamed Samli · Friends with Jaleel Mohdand 14 others
    ஒவ்வொருவர் உச்சியிலும் ஆளுக்காள் மாறி மாறி கொச்சிக்காய் அரைக்கிரார்ள்.நல்ல வாக்கியங்கள்.வாழ்த்துக்கள் வழரட்டும்
  • Krishnan Mahadevan அபாரம்...பிரமாதம் ! தையல் சொல் கேளீர் - கிழட்டுத் தமிழச்சி அவ்வை தான் நினைவுக்கு வருகிறது !!
  • Mathi Vijaya · Friends with Eezhavaani Poems
    மாமியாரை அம்மாவாகவும், மருகியை மகளாகவும்
    நினைத்தால் பிரச்சனை இல்லை. வார்த்தைக்காக மட்டும் சொல்லாமல் செயல்படுத்தினால்
    நன்றாக இருக்கும்.

0 கருத்துக்கள்:

Post a Comment