நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Monday, July 28, 2014

போகுதே பொன்வசந்தம் !

போகுதே பொன்வசந்தம் !
........................................
....

கட்டிவைத்தவை மீண்டும்
கட்டவிழப்போகுது
சுட்டெரித்தவை வந்து
பற்றிப்பிடிக்கப் ஏங்குது!

கழுவிப்போட்ட மனதில்
மறுபடியும் கறைபடியப்போகுதே
நழுவிப்போகுதே நல்மாதம்
வருடமொன்றாகுமே மீண்டும் வர !

அது பாவத்தின் கடிவாளம்
மூர்க்கத்தை மூட்டைகட்டியது
கோபத்தின் படியுடைத்தது
சொர்க்கத்துக்கு வழிசமைத்தது !

தூங்காமல் தொழுதழுது பசிக்கு
ஏங்காமல் பசித்திருந்து
தான தர்மம் பலசெய்து
மாதமொன்று மகிழ்ந்திருந்தோம்

கொட்டி முடித்தவை பல கோடி
ஏழைகளின் உணவு
கட்டி அணைத்ததோ பல வருட
நன்மை கொள் இரவு !

ஒட்டறை பிடித்திருந்த உறவுகளை
தூசி தட்டி சுத்தம் செய்தோம்
இறைவன் கட்டளை இட்டவற்றை
சிரமேற்று வழி நடந்தோம்

சதகாவும்
சகாதுல் பிதுரும்
இறப்போர் மட்டுமன்றி
இருப்போர்க்கும்
ஈந்துவந்தோம் !

சுணங்கி வந்த மாதம்
சுருக்கா முடிந்திட்டது
பிணங்கி முரளாமல்
பெருநாளும் இனிதே முடிவாதே!

இந்த முறை ரமளானில்
வடைசுட்டு உண்டதை விட
"காசா"வில் காபிர்கள்
சகோதரை சுட்ட கதை
தடம் பதித்து போனதடா!

இனிய பெருநாளில்
இனிப்பான மனத்துடனே
மனம் மகிழ
இனி மகிழ்வோம்

இம்மாதம் இருந்ததுபோல்
எந்நாளும் இருந்திடவே
மனதில் திடம் பூண்வோம்
வாழ்வில் என்றும் தடம் புரளோம் !

மு.இ.உமர் அலி
2014 ஜூலை 28

0 கருத்துக்கள்:

Post a Comment