நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Friday, July 25, 2014

புழுக்கமோ புழுக்கம் !

உச்சத்தில் இருந்த
நெருப்புமச்சம்
கிட்டத்தில் வந்து
ஊரைச் சுட்டுப்பொசுக்குது

திறக்க மறுக்கின்ற
இலைவாய்களை வெய்யில்
இடந்து இருக்கின்ற
ஒழுப்பம் நீரையும்
இரக்கமின்றி
உறுஞ்சி எடுக்கின்றது!

அவ்வளவு கோடை
அறுந்த கோடை
அடிக்கிணறு அச்சமுற்று
ஆடிப்போய் நிற்கிறது

ஓடித்திருந்த
அறுகு களைத்து
வாடித்தெரிகிறது
வாlளைப்போல் சுருண்டு
வளைந்தும் நெளிகிறது!

அழுதழுது அனைத்துமரங்களும்
ஓய்ந்தே விட்டன
சருகாக காய்ந்து
உதிர்ந்து கொண்டிருக்கின்றன!

புற்றரைகள் தீப் பற்றிக்கொள்ள
எப்பொழுதும் தயார்நிலையில்
இத்தரையில் இவ்வளவெனில்
அத்தரையில் எங்கனமோ?

நினைக்கையில் நடுங்குதடா
புழுக்கம் எங்கோ ஓடி ஒழிக்குதடா
மஹ்சறை நினைக்கையிலே!

மு.இ.உமர் அலி
2014 July 25

0 கருத்துக்கள்:

Post a Comment