நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Sunday, July 6, 2014

என்ன இது ?


என்ன இது ?

மலைகளாக குவிந்திருந்தன
சமைத்த தானியங்களும்
பழுத்த கனிவகைகளும் 
பல வர்ண பழச்சாறுகளும்

குளைந்த கஞ்சிகளும்
அழையப்படாத ஆனால்
பெயர் அறியாத உண்டிகளும்
எல்லாம் சுவையானவைதான்
நல்ல மணமானவையும்தான் ,

முழு இலைகளில்
பரப்பப்பட்டிருந்தவைகளில்
பாதி மட்டுமே
சில வினாடிகளில்
இரையாகிப்போக
எஞ்சியவை இறைந்து கிடக்கின்றன

உண்ணப்பட வேண்டியவைகள்
கண்களால் கூட தீண்டப்படாமலும்
பருகப்பட வேண்டியவைகள்
ஏறெடுத்துக்கூட கூட பார்க்கப்படாமலும்
எச்சமாக ,மிச்சமாக
ஐயோ எவ்வளவு எவ்வளவு !

பாவம் இந்த பட்சணங்களா
இல்லை பாவம் மறந்தவர்தான்
இச்சனங்களா?

எதற்காக இவை பிரசவிக்கப்படுகின்றன
குப்பைத்தொட்டிக்குள் வீசி
கொல்லப்படுவதற்கா ?

கொடுப்பதற்கு கொஞ்சம் கூட
விருப்படாதவர்கள்
எடுப்பதற்கு கிஞ்சித்தும்
விருப்பமில்லாதவர்கள்!

அந்தப்பெரும் கவளங்களும்
உருண்டைகளும்
நிச்சயமாக ஈக்களுக்கும் எறும்புகளுக்கும்
மிகப்பெரியனவாகவே இருக்கும்!

கழிக்கப்பட்டு மூச்சடைக்கும்வரை
கறுப்புப்பைகளுக்குள் கட்டப்பட்டு
கிடந்குகளினுள் அடங்கி
எங்கோ வறண்ட பாலைவனத்தில்

உயிருடனே சமாதியாகப்போகின்ற
கைபடாத கன்னி உணவுகளின்
நாமங்கள்கூட அறியாத
பல கோடி மனிதர்கள் உலகின் கோடிகளில்
வறுமை ராஜ்யத்தின்
உரிமைக்கொடியை
உயர்த்திபிடித்துக்கொண்டு
பசி பசியென்று
பட்டிணிக் கோசம் உச்சரிக்கிறார்கள் !

வணக்கத்தின் பெயரால்
உணவு துவம்சிக்கப்படுகின்றது
இல்லை இல்லை துஷ்பிரயோகிக்கப்படுகிறது
கொட்டித்தீர்க்கப்படுகிறது
இதைப்பார்த்து தட்டிக்கழப்பதா
இல்லை திட்டித்தீர்ப்பதா

என்னை நானே நொந்துகொள்கிறேன் !

மு.இ.உமர் அலி
2014 July 6th
 — with Ssm RafeekRazana Manaf,Rijan Muhammadh and 46 others.
LikeLike ·  · Stop Notifications · Share
  • வளர்மதி சிவா உயிருடனே சமாதியாகப்போகின்ற 
    கைபடாத கன்னி உணவுகளின்
    நாமங்கள்கூட அறியாத
    கோடி மனிதர்கள் உலகின் கோடிகளில்
    வறுமை ராஜ்யத்தின் 
    உரிமைக்கொடியை 
    உயர்த்திபிடித்துக்கொண்டு
    பட்டிணி கோசம் போடுகிறார்கள்///நானும் தான் நொந்து கொள்கிறேன் சகோதரனே இந்நிலை அறிந்து
  • Meera Mahroof !!!
    “வணக்கத்தின் பெயரால் 
    உணவு துவம்சிக்கப்படுகின்றது 
    இல்லை இல்லை துஷ்பிரயோகிக்கப்படுகிறது 
    கொட்டித்தீர்க்கப்படுகிறது 
    இதைப்பார்த்து தட்டிக்களிப்பதா
    இல்லை திட்டித்தீர்ப்பதா“

    செல்வந்த அரபு நாடுகளில்தான்
    இவ்வாறு நடைபெறுவதாக அறிகிறேன்
    அங்கு உள்ளவர்கள் இஸ்லாத்தை
    விளங்கவில்லை என எண்ணத்தோண்றுகிறது.

    அளவைக் கணிக்க தெரியவில்லையா?
    உலகில் பட்டினி கிடப்பவர்கனைத் தெரியவில்லையா?
    என்ன நினைத்துக்கொணடார்கள் பாவிகள்.

    “உலகில் அணுவளவு செய்த நன்மையையும்,
    தீமையையும் மறுமையில் கண்டுகொளவார்கள்“ 
    என்று அல்லாஹ் கூறுகிறான்.

    படம் பிடித்துக்காட்டிய உங்கள் கவிதை
    வரகளுக்காக பாராட்டுக்கள் உமர் அலி.
  • Abdul Majeeth .
    Veenn wirayam seywore 
    Saitaanin udanpirapugal
    -Al qur'an
  • Ratha Mariyaratnam ஒரு வர்க்கம் பசித்திருக்க
    ஒரு வர்க்கம் புசித்திருக்க
    புசிக்கும் வர்க்கமோ
    புளிச்சல் ஏவறையில்- அவர்
    புறம் தள்ளும் ஒரு நாள் உணவு வகை
    பசித்தவனுக்குப் பல நாள் உணவாமே
    பிறந்தது முதல் இறப்பு வரை 
    கனவிலும் கண்டிராத பல்வகை உணவு
    பகல் கனவாய் இருக்கும் பதார்த்தவகை
    சேரும் இடம் விட்டுச் ,சேரா இடம் சென்று
    குப்பை மேட்டைச் சேருவது முறையோ
    ஒட்டிய ஒரு சாண் வயிற்றுக்கு
    வட்டிலப்பம் வேண்டாம் வரண்ட ரொட்டி போதும்
    தட்டு முழுக்க உணவு வேண்டாம்
    ஓரமாய் ஓரிரு பருக்கை போதும்
    மாமிச உணவு வேண்டாம் மரக்கறிவகையே போதும்
    ஒட்டிய வயிறு கொஞ்சம் உப்பினால் போதும்
    தேவைக்கு மேலே உணவைத் தேக்கி வைத்து
    பாவிக்க முடியாமல் தூக்கி எறிவோரும்
    அளவுக்கு மேலே உணவைச் சமைத்து 
    உண்ண முடியாமல் எறிவோரும்
    கண்ணை மூடி ஒரு கணம் பாருங்கள்
    விண்ணை நோக்கிய உங்கள் கை உயர
    தானம் அளியுங்கள் தாகம் தீருங்கள்
    எழையவன் பசி போக்க முயலுங்கள்
    தானம் அளிக்காவிடினும் வீணாக்க வேண்டாம்
  • Amier Ali MI · Friends with Shafath Ahmed and105 others
    MOLSTLY OUR PEOPLE SPECIALLY GULF COUNTRIES DO THIS . REALLY SHOULD BE AVOIDED.
  • Mohamed Janofar எல்லோரும் கண்களால் காண்பதை கருத்தில் உறைக்கச் சொல்லியிருக்கிறீர். நன்றி.
  • Rameeza Mohideen Yaseen பசிப்பிணியில் வாழ்வோர் மத்தியில் வீண்விரயம் செய்வோரை சுட்டிய கவி நன்று.
    நோன்பு காலத்தில் அதிகமாக நடக்கக்கூடிய அவலம் இது.உணவுக்காக அலையும் மனிதர்களைக்கண்டு நானும் மனம் நோகின்றேன்.
  • Mohamed Ismail Umar Ali கருத்திட்டு கவிதைகளுக்கு கருக்களை விதைக்கின்ற என் அன்பு உறவுகளுக்கும்,விருப்பிடுபவர்களுக்கும் நன்றி Rameeza Mohideen Yaseen,MohamedMohamed Janofar,Amier Ali MI,Ratha Ratha Mariyaratnam,Abdul Abdul Majeeth,Meera Meera Mahroof,Valarmathy Valarmathy Siva
  • கொலின் நித்தியேந்திரன் மரியாம்பிள்ளை · Friends with Winston Fernando
    புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் ஈழத்தமிழருக்கு இது சமர்ப்பணம்.(சாமத்தியச்சடங்கு, திருமணம், அந்தியேஸ்டி, முதல்நன்மை, ஞாபகார்த்தம், இப்படியே இன்னும் பல)
    6 July at 15:26 · Edited · Unlike · 2
  • Dawood Ahamed வணக்கத்தின் பெயரால் 
    உணவு துவம்சிக்கப்படுகின்றது //உண்மை...
  • Arumuga Nainar Markasyam niraintha kavithai......Nantri
  • Kalam Shaick Abdul Kader ஊண்நிறைய வீணாகி உண்ணாமல் போவது
    வீண்விரயம் ஷைத்தான் விருந்து
  • Ibra Lebbai Yiraivanidam yithatkum bathil kooriyaga veandum !
  • Sunandha Prabha Excellent poem... ippadiyum oru ulakam... vedhanai...oruvanuk unna unavillayenil jagathinai azhithiduvomnu padinan barathi... padalkalil matume veeram... unna vazhiyindri oru kootam unavai veenakum oru kootam.. vedhanai. Anal ithu mele nadukalilum hightec cities layum than nadakuthu. Gramangalil mika kuraive..micha unavai anadhashramangaluk anupi vidukirarkal...vazhthukkal kavi.. வணக்கத்தின் பெயரால் உணவு துவம்சிக்கப்படுகின்றது இல்லை இல்லை துஷ்பிரயோகிக்கப்படுகிறது கொட்டித்தீர்க்கப்படுகிறது இதைப்பார்த்து தட்டிக்கழப்பதாஇல்லை திட்டித்தீர்ப்பதா என்னை நானே நொந்துகொள்கிறேன் ! mika arumai vazhukkal..!!

0 கருத்துக்கள்:

Post a Comment