நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Monday, July 7, 2014

பொய்


பொய்

பொய்யை பட்டுச்சேலையால்
இட்டுக்கட்டி அதற்கு பொட்டும்
வைத்திருந்ததால் எல்லோரும்
அதை உற்றுப்பார்த்தார்கள்

உண்மை எந்தச் சேலையும்
கட்டாமல்
உரியானோடு ஊமையாயிருந்ததால்
அதை யாரும்
ஏறெடுத்தும் பார்க்கவில்லை!

தர்மம் ஒருநாள் போர்தொடுத்து
பொய்யைத் துகிலுரியும்போது
நிச்சயமாய் பொய் தலைகுனிந்து தீக்குளிக்கும்!

மு.இ.உமர் அலி
7 july 2014
LikeLike ·  · Stop Notifications · Share

0 கருத்துக்கள்:

Post a Comment